இதே விக்கிரவாண்டியில் தான் அந்த நள்ளிரவில் கடும் தாக்குலை எதிர்கொண்டனர் கலைஞரின் உடன்பிறப்புகள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இதே விக்கிரவாண்டியில்தான் அந்த நள்ளிரவில் கடும் தாக்குலை எதிர்கொண்டனர் கலைஞரின் உடன்பிறப்புகள்.
1987 செப்டம்பர் 16ஆம் நாள் சென்னையில் அண்ணா அறிவாலயம் திறப்பு விழா. தலைவருக்கும் தொண்டர்களுக்குமான உறவையும் உணர்வையும் வெளிப்படுத்தம் வகையில் வெற்றிகரமாக நடந்துமுடிந்து, அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது நடந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் இடஒதுக்கீடு கோரி சாலை மறியல் போராட்டம் நடத்திய டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத்தினர், தி.மு.க.வினர் பயணித்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்தியதுடன், தி.மு.க. நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கடுமையாகத் தாக்கினர். கருப்பு-சிவப்பு கரை வேட்டி, ரத்தக் கறை வேட்டியானது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்காக, கலைஞர் தன் உடன்பிறப்புகளிடம்தான் மன்னிப்பு கேட்டாரே தவிர, இடஒதுக்கீட்டுப் போராட்டத்தினரின் நோக்கத்தை குறை சொல்லவில்லை. அந்த சூழலிலும், கழகத்தினருக்கு உதவிய வன்னியர் சமுதாயத்தினர் உள்ளிட்ட விக்கிரவாண்டி பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பெட்டிச் செய்தி வெளியிட்டது முரசொலி.
எம்.ஜி.ஆர். அரசு கடைசிவரை இடஒதுக்கீடு வழங்காத நிலையில், 1989ல் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர்தான் வன்னியர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 20% இடஒதுக்கீட்டை வழங்கினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

விமர்சிப்பவர்கள், தாக்குபவர்கள், அவதூறு பரப்புகிற ஒரு சிலரின் சுயநல அரசியல் நோக்கத்திற்காக அவர்களின் சமுதாயத்தைப் புறக்கணிக்கும் வழக்கம் திராவிட இயக்கத்திற்குக் கிடையாது. சீர்மரபினருக்கான இடஒதுக்கீடு, கொங்குவேளாளர் சமுதாயத்தினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, முஸ்லிம்களுக்கு 3.5% தனி ஒதுக்கீடு, அருந்ததியர் சமுதாயத்திற்கு 3% உள்ஒதுக்கீடு, பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடு என அனைத்தும் கலைஞர் தலைமையிலான தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டவை.
தங்கள் சாதி வாக்குகளை நம்பி அரசியல் நடத்துபவர்கள் அவரவர் சாதியைச் சார்ந்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவார்கள். அது இயல்பானது. அதிலும் சிலர், தங்களுக்குப் போட்டியாகத் தங்கள் சமுதாயத்தில் யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசியல் செய்வார்கள். அண்ணல் அம்பேத்கரை தந்தை பெரியார் கொண்டாடியபோதே, அதனை எதிர்த்து இங்கே லோக்கல் அரசியல் நடந்திருக்கிறது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

திராவிட இயக்கம் என்பது அனைத்து சமுதாயத்தின் நலனுக்கானது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு செயல்படுவது. இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதும் தி.மு.க. அரசுதான். தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததுடன், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்க வழி செய்ததும் தி.மு.க அரசுதான். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சிக்கும் தி.மு.க அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் அடித்தளமாக இருந்திருக்கின்றன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மற்றவர்களால் தி.மு.க.வை விமர்சிக்க மட்டும்தான் முடியும். தி.மு.க.வால்தான் மற்றவர்களுக்காக ஆக்கப்பூர்வமாக செயலாற்ற முடியும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தின் வெற்றி, ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்ற இலட்சிய இலக்கு கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்குத் தெம்பாக அமையட்டும்.
தந்தை பெரியார் சொன்னது போல, எதிரிகள்தான் நமக்காக விளம்பரம் செய்பவர்கள். பேரறிஞர் அண்ணா சொன்னதுபோல, வாழ்க வசவாளர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னதுபோல, தி.மு.க.வை அழித்தொழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது.
நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் சாதனைப் பயணம் தொடரும்.
திருவள்ளுவர் ஆண்டு 2055 ஆனி 26
கோவி.லெனின்.
ஆலோசகர், (தகவல் தொழில்நுட்ப அணி),

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.