“பழமைவாதத்தை அடித்து நொறுக்கு வார் இந்த ‘சார்’– சிலாகித்துப் பேசிய சீமான் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“பழமைவாதத்தை அடித்து நொறுக்கு வார் இந்த ‘சார்’– சிலாகித்துப் பேசிய சீமான்!

‘எஸ்.எஸ்.எஸ்.பிக்சரஸ்’ சிராஜ்.எஸ். தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில்,  கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள  ‘சார்’ படம் வரும் 18-ஆம் தேதி ரிலீஸாகிறது. சமீபத்தில்  இப்படத்தைப் பார்த்த பின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘சார்’ குறித்து சிலாகித்து பேசியது…..

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

“அன்புக்குரிய தம்பி நடிகர் போஸ் வெங்கட்டை நடிகராகத் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இயக்குநராக அவரது இரண்டாவது படமான ‘சார்’ -ஐ   SSS Pictures நிறுவனத்தின் சார்பில் இளைஞர்கள் இணைந்து, தயாரித்திருக்கிறார்கள்.  கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நாங்கள் எல்லாம் கற்று,  இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்.

Seaman who spoke in syllogism
Seaman who spoke in syllogism

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

பல கிராமங்களில் எங்களது பெற்றோர்கள், 50 கிலோமீட்டர் தாண்டி, பயணித்ததே இல்லை. அப்படி இருக்கும் இந்த வேளையில் பழமைவாத நம்பிக்கைகள், அறிவை வளர்க்கும் இந்த கல்வியை, உள்ளே விடாமல் தடுக்கிறது, எவ்வளவு இடையூறாக இருக்கிறது, முட்டுக்கட்டை போடுகிறது, என்பதை மிக ஆழமாக, அழுத்தமாகத் இந்தப்படத்தில் எடுத்துக் காட்டி இருக்கிறார்போஸ் வெங்கட்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் தம்பி விமல், தம்பி சரவணன், எல்லோரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் அந்த சிறுவர்கள், இத்தனை சின்ன வயதில், எப்படி இத்தனை அழகான நடிப்பைத் தந்தார்கள், என்பதும் எப்படி நடிக்க வைத்தார் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது. பழமை வாதத்தை உடைத்து, கல்வியை நம் மக்களிடம் சொல்லிக் கொண்டு செல்ல, நம் முன்னோர்கள் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை, இந்த திரைப்படம் வெகு அழகாக எடுத்துக்காட்டுகிறது.

மருத்துவம் போய்ச் சேராத மக்களுக்கு எப்படி சேகுவாரா மருத்துவத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தாரோ,  அதேபோல் கல்வி அறியாத மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்க நினைக்கும், ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர், அவருடைய மகன், அவருடைய பேரன் என மூன்று தலைமுறை செய்த சேவை தான் இந்த திரைப்படம். ஒரு நடிகராக அவரை நமக்குத் தெரியும், ஒரு மிகச்சிறந்த படைப்பை உருவாக்கும் படைப்பாளனாக, இந்தப்படம், அவரை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.  தம்பி போஸ் வெங்கட்டுக்கும், படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில் நுட்பக் குழுவினருகக்கும் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்கள் அனைவருக்கும், என்னுடைய வாழ்த்துக்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.

‘சார்’ படத்தின் ஒளிப்பதிவு இனியன், போர்த்தொழில் படப்புகழ்  ஶ்ரீஜித் சாரங் எடிட்டிங், இசை: சித்து குமார், கலை இயக்கம் பாரதி.

இயக்குநர் வெற்றிமாறனின் ‘கிராஸ்ரூட்’ நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்குகிறது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் ‘கோட்’ படத்திற்குப் பிறகு ‘சார்’ படத்தை தமிழகமெங்கும்  வெளியிடுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.