அங்குசம் பார்வையில் ‘பிளாக்’ திரைப்பட விமர்சனம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் பார்வையில் ‘பிளாக்’தயாரிப்பு : ’பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ எஸ்.ஆர்.பிரபு, பி.கோபிநாத், ஆர்.தங்க பிரபாகரன். டைரக்‌ஷன் : கே.ஜி.பாலசுப்பிரமணி. நடிகர்—நடிகைகள் : ஜீவா, ப்ரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, ‘ஷா ரா, ‘யோகி’ ஜேப்பி, ஸ்வயம் சித்தா, சிந்தூரி. ஒளிப்பதிவு : கோகுல் பினோய், இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : பிலோமின் ராஜ், ஆர்ட் டைரக்டர் : சதீஷ் குமார், பி.ஆர்.ஓ. : ஜான்சன்.

கடற்கரையோரம் இருக்கும் தனி வில்லாக்கள் ஒன்றில் நான்கு நாள் தங்கும்  ட்ரிப்புக்காக செல்கிறார்கள் ஜீவாவும் ப்ரியா பவானிசங்கரும். பகலில் செல்லும் அவர்களுக்கு ரொம்பவும் அமைதியான அந்தச் சூழல் ரொம்பவே பிடித்துப் போகிறது. மாலை 3 மணிக்க்கு ஷாப்பிங் சென்றிவிட்டு, இரவு திரும்பிய பின் தான் அந்த வில்லாவில்  அமானுஷ்யங்கள்  நடக்க ஆரம்பிக்கின்றன. ஒரு கட்டத்தில் உயிர் பயம் அதிகரிக்க, அந்த வில்லாவைவிட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்து அதே வில்லாவுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறார்கள். ஜீவாவையும் ப்ரியாவையும் பயமுறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தி எது என்பதன் சயிண்டிஃபிக் ட்விஸ்ட் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘பிளாக்’.

Sri Kumaran Mini HAll Trichy

ப்ரியா பவானிசங்கர்
ப்ரியா பவானிசங்கர்

தமிழ் சினிமாவின் பெர்மெனெண்ட் டெம்ப்ளேட்டான பேய், பிசாசு, ஆவி, பூதம், க்ரைம் த்ரில்லர் படங்களிலிருந்து முற்றிலும் டிஃபெரெண்டான படம் தான் இந்த ‘பிளாக்’. படத்தின் டைட்டிலுக்கான காரணத்தை இருட்டுப் பகுதி ஒன்றை க்ராஸ் பண்ணும் போது நிகழும் திடுக்கிட வைக்கும் பழைய [ 1964 ] சம்பவத்துடன் இப்போது நடக்கும் திடுக் சம்பவத்தை மேட்ச் பண்ணி கச்சிதமாக கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் கே.பாலசுப்பிரமணி.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

”ஒரு ஆங்கிலப்படத்தின்  ரீமேக் உரிமையை  முறையாக அனுமதி வாங்கி, தமிழில் ‘பிளாக்’ காக்கியுள்ளோம். அது எந்த ஆங்கிலப்படம் என்பதை பட ரிலீசுக்குப் பின் சொல்கிறேன்” என இந்த பிளாக் பட டிரைலர் ரிலீஸின் போது நேர்மையாக சொல்லியிருந்தார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.  அதற்காகவே தயாரிப்பாளரையும் இயக்குனரையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

படத்தில் அதிகபட்ச சம்பளம் என்றால் அது ஜீவாவுக்கும் ப்ரியா பவானிசங்கருக்கும் தான். தொழில்நுட்ப நேர்த்திக்காகவும் கொஞ்சம் பெரிய தொகை செலவாகியிருக்கும். ஆனால் இயக்குனரின் திரைக்கதை நுட்பம் மெகா மெகா பட்ஜெட் படங்களைவிட  பிரமிக்க வைக்கிறது.

Flats in Trichy for Sale

ப்ரியா பவானிசங்கர்
ப்ரியா பவானிசங்கர்

இயக்குனரின் இண்டெலிஜெண்ட் ஸ்கிரிப்டுக்கு ரொம்ப..ரொம்ப… சப்போர்ட்டாக இருக்கிறார்கள் கேமராமேன் கோகுல் பினோயும் மியூசிக் டைரக்டர் சாம். சி.எஸ்.ஸும். ஏன்னா இரண்டு மணி நேரப் படத்தில் 1 மணி நேரம் 50  நிமிடம் இரவுக்காட்சிகள் தான்.  மேலும் இயக்குனர் சொல்லும் அந்த ‘பிளாக்’ கனெக்‌ஷன் ஏரியாவில் கோகுல் பினோயும் சாம் சி.எஸ்.ஸும் கைகோர்த்து கடினை உழைப்பைத் தந்துள்ளார்கள். அதிலும் சாம் சி.எஸ்.பின்னணி இசையமைத்த படங்களில் இந்த ‘பிளாக்’தான் ஃபர்ஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு பெஸ்டாக பண்ணியுள்ளார்.

ஹீரோ ஜீவாவுக்கும் இது பெஸ்டான படம் தான். இந்த மாதிரியான சினிமாக்கள் தான் தமிழ் சினிமாவில் ஜீவாவின் இருப்பை உறுதி செய்கின்றன. அதே போல் ஹீரோயின்  ப்ரியா பவானி சங்கர் அடடே.. ஆஹா..சபாஷ் போட வைக்கிறார். படம் முழுக்க தனது சூப்பர் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தி க்ளைமாக்ஸ் வரை பிளாக்கில் பிரைட்டாக தெரிகிறார் ப்ரியா பவானி சங்கர்.

இயக்குனர் பாலசுப்பிரமணியின் திரைக்கதைத் திறமைக்காகவும் சில அறிவியல் ஆதாரங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்காகவும் இரண்டாவது முறையும் பார்க்கத் தூண்டுகிறது இந்த ‘பிளாக்’.

–மதுரைமாறன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.