“சூப்பர் ஸ்டாரின் பஞ்ச் டயலாக் இன்ஸ்பிரேஷன் தான் ‘லக்கி பாஸ்கர் “– டைரக்டர் வெங்கி அட்லூரி சொன்னது!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில்  துல்கர் சல்மான்- மீனாட்சி செளத்ரி மற்றும் பலர் நடிப்பில் தயாராகி யுள்ள’லக்கி பாஸ்கர்’ படம் வருகிற  அக்டோபர் 31   தீபாவளிக்கு  வெளியாகிறது. இதனையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பு அக்டோபர் 23 ஆம் தேதி காலை சென்னையில் நடந்தது.

லக்கி பாஸ்கர்இதில் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான், இயக்குனர் வெங்கி அட்லூரி, நம்ம ஊரு நடிகர் ராம்கி ஆகிய மூவர் கலந்து கொண்டனர். முதலில் மைக் பிடித்தார்… ராம்கி”இந்தப்  படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் படத்தை தமிழுக்கு ஏற்றது போலவும் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் நன்றாக வந்திருக்கிறது.

Kauvery Cancer Institute App

லக் என்றால் அதிர்ஷ்டம். நாம் ஒரு விஷயத்திற்கு தயாராக இருக்கும்போது வரும் வாய்ப்பைத்தான் அதிர்ஷ்டம் என்போம். துல்கர் திறமையான நடிகர். அப்பா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நம்மிடம் எளிமையாகப் பழகுவார். பழைய பாம்பேவை நம் கண் முன்னே செட் போட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

லக்கி பாஸ்கர்வெங்கி அட்லூரி அதட்டாமல் எல்லோரிடமும் அமைதியாக வேலை வாங்கி படத்தை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். மீனாட்சி செளத்ரி அழகாக இருக்கிறார் .சிறப்பாக நடிக்கவும் செய்திருக்கிறார். இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலைப் பெற்று எல்லோருக்கும் ‘லக்கி’யாக அமைய வாழ்த்துக்கள். தீபாவளிக்கு குடும்பத்தோடு இந்தப் படம் பாருங்கள்”.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அடுத்து……

அங்குசம் டிவி கண்டு களியுங்கள்..

இயக்குநர் வெங்கி அட்லூரி “இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனெனில்,  தனுஷின் ‘வாத்தி’ படம் முடித்ததும் அதில் இருந்து வித்தியாசமாக ஏதாவது படம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். கிரே ஷேட் கேரக்டரில் என் ஹீரோவை கொண்டு வர நினைத்து செய்ததுதான் ‘லக்கி பாஸ்கர்’. என் கனவின் மீது நம்பிக்கை வைத்து படம் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸூக்கு நன்றி.

லக்கி பாஸ்கர்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்திற்கு நான் மிகப்பெரிய ரசிகன். அதில் ரஜினி வசனமே இல்லாமல் மாஸான பின்னணி இசையோடு நடந்து வருவதும், ‘கூட்டி கழிச்சுப் பாரு கணக்கு கரெக்ட்டா இருக்கும்’ என பஞ்ச் வசனமும் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்தும் இந்தக் கதையில் சில ஆக்‌ஷன் காட்சிகளைக் கொண்டு வர முயன்றேன். ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திலும் சிறப்பான இசையும் பாடல்களும் கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் வங்கியை மையப்படுத்தி குறைவான படங்களே வந்திருக்கும். அதில், ‘லக்கி பாஸ்கர்’ படமும் ஒன்று. படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

இறுதியாக…

துல்கர் சல்மான் “நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் படம் ‘லக்கி பாஸ்கர்’ வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  இந்த பாஸ்கர் கேரக்டர் எல்லோருக்கும் கனெக்ட் ஆகும். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர் பாஸ்கர் என்பதால் அதைச் சுற்றி கதை இருக்கும்.  ராம்கி சாரின் கதாபாத்திரம் படத்தில் மிக முக்கியமானது. இரண்டு வருடங்களாக வெங்கியுடன் பணிபுரிந்திருக்கிறேன். இப்போது வெங்கி என்னுடைய பிரதர்.

இந்த பாஸ்கர் வாழ்க்கையில் முக்கியமான பங்கு மீனாட்சி செளத்ரிக்கு உண்டு. படம் முழுக்க வருகிறார். எனது மகனாக ரித்விக் நடித்திருக்கிறார். இந்த வயதில் மிகவும் திறமையான நடிகராக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் படம் என்பதால் என் மனதுக்கு நெருக்கமாக உள்ளது. தீபாவளிக்கு ‘அமரன்’, ‘பிரதர்’, ‘ப்ளெடி பெக்கர்’ படங்களும் வருகிறது. இதில் ‘லக்கி பாஸ்கர்’ படமும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்”.

 

 — மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.