அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’குடும்பஸ்தன்’  வெற்றிக்கு நன்றி சொன்ன படக்குழு!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சினிமாக்காரன்’ எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்த  ‘குடும்பஸ்தன்’ படம் ஜனவரி  24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி,  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனால் உற்சாகம் அடைந்த படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு  ஜனவரி 31-ஆம் தேதி நடந்தது.

நிகழ்வில்….

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இயக்குநர் பாலாஜி சக்திவேல்

“சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’, ‘குடும்பஸ்தன்’ இந்த இரண்டு படங்களும் எளிய முறையில் பல அழுத்தமான விஷயங்களை படமாக்கி ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்திருக்கிறது. கருத்தாக சொல்லாமல் வாழ்வியலையும் சேர்த்து சொன்னதே ‘குடும்பஸ்தன்’ படத்தின் வெற்றி. வெகுஜனம் ஏற்றுக்கொள்ளும்படியான படம் இது”.

யாவரும் கேளீர்

ஹீரோயின் ஷான்வி மேக்னா,

“என்னுடைய முதல் படத்திற்கே இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஹைதரபாத்திலும் சீக்கிரம் இப்படம் வெளியாக இருப்பதை எதிர்பார்த்திருக்கிறேன். என் கதாபாத்திரத்தை போல மனைவி வேண்டும் என பலரும் சொல்லியிருந்தார்கள். பணம் என்பது ஒருவரின் வாழ்வில் முக்கியமில்லை என்பதை இந்தப் படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது”..

தயாரிப்பாளர் வினோத்,

“ஹீரோவில் இருந்து இயக்குநர் வரை என் படக்குழுவினர் எல்லோருக்கும் நன்றி”. கதாசிரியர் பிரசன்னா பாலச்சந்திரன், “நக்கலைட்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. ஓயாத இயந்திரத்தைப் போல எங்கள் பின்னால்  இந்த அணி ஓடிக் கொண்டிருந்தது. நக்கலைட்ஸ் ஆரம்பித்த இந்த எட்டு வருடங்களில் எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யூடியூபில் தான் நாங்கள் சினிமாவுக்கான பயிற்சியே எடுத்தோம். ’குடும்பஸ்தன்’ படம் இந்தளவு வெற்றியடையும் என எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் நன்றி”.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இசையமைப்பாளர் வைசாக்,

“மக்களிடம் நிச்சயம் நல்ல படமாக போய் சேரும் என்ற நம்பிக்கையுடன் உழைத்த படம் இது. படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இதற்கான பலன் தான் இந்த சக்சஸ் மீட். எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள், குடும்பத்திற்கு நன்றி”.

திங்க் மியூசிக் சந்தோஷ்

“மணிகண்டனுடன் எங்களுக்கு நான்காவது படம். தனியிசைக் கலைஞராக இருந்து வைசாக் இசையமைப்பாளராகவும் அருமையாகசெய்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்”.

இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி,

“படம் பார்த்து கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றி. நக்கலைட்ஸ் குழுவுக்கு நன்றி. எங்கள் முதல் படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

ஹீரோ மணிகண்டன்

“படக்குழுவினர் நாங்கள் அனைவரும் எளிய பின்னணி கொண்டவர்கள். படம் எடுப்பது தனி போராட்டம் என்றாலும் எடுத்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்ப்பதும் பெரிய  போராட்டம். அந்த மலை போன்ற போராட்டத்தை பனி போல எளிமையாக ஆக்கி கொடுத்த பத்திரிகை நண்பர்களுக்கும் எங்களை சரியான விதத்தில் வழிநடத்திய பிஆர்ஓ.சுரேஷ் சந்திரா சாருக்கும் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி”.

 

— மதுரை மாறன் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.