”பாஜக” வாக்கு வங்கிக்காக எந்த சமூகத்தையும்., மதத்தையும் அரவணைக்காது ! வேலூர் இப்ராஹிம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

என்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் சிந்திக்கிறதோ., இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமூகம் பங்கு வேண்டும் என நினைக்கிறதோ அன்றைக்கு பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். – மதுரையில் வேலூர் இப்ராஹிம் பேட்டி.

*வப்பு திருத்த சட்ட மசோதா குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்ட குழுவினுடன் மதுரை மாநகர் பாஜக மாவட்ட நிர்வாகி உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேட்டி….

இனிய ரமலான் வாழ்த்துகள்

மதுரை மாநகர் பாஜக சார்பில் மாட்டுத்தாவணி பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் பெயரில் வக்பு வாரியத்தின் பணிகளை நெறிப்படுத்தவும் வக்பு வாடிய சொத்துக்களின் திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் வக்பு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

இம் மசோதா பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாநில பொதுச் செயலாளர் பொன். பாலகணபதி தலைமையில் மாநில அளவில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள், வக்பு திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அமைக்கப்பட்ட குழுவினர் ஆலோசனை மேற்கொண்டனர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி தேசிய செயலாளர் சிறுபான்மை பிரிவு வேலூர் சையது இப்ராஹிம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசிய வேலூர் இப்ராஹிம் கூறுகையில்….

பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்களாக இருந்தாலும் அல்லது இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நியாய கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நேர்கொண்ட பார்வையில் வக்பு திருத்தச் சட்ட மசோதா என்பது ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இதனை தவறாக  பிரச்சாரம் செய்வதும் அதனை திமுக உத்வேகப்படுத்துவதும் பாஜக வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமியர்களுக்காக கொண்டுவரப்படக் கூடிய சட்டங்களை தமிழகத்தில் எப்படி திரித்து பேசுவதும் மக்களிடத்தில் கொண்டு செல்வதை விளக்கும் விதமாக, பொதுக்கூட்டம், பிரச்சாரம், துண்டு அறிக்கை ஆகியவற்றை செய்வதன் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

முதலாவதாக மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் மக்களை சந்திக்க இருக்கிறோம். வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக திமுக பேசுவதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் நாங்கள் சொல்வது இந்த தேசம் எல்லோரையும் அரவணைத்து எல்லோருக்குமான வளர்ச்சியை என்ற நோக்கில் செயல்படுகிறது.

மதுரையில் பாஜக வேலூர் இப்ராஹிம் பேட்டி.
மதுரையில் பாஜக வேலூர் இப்ராஹிம் பேட்டி.

எல்லோருக்கும் நீதி செலுத்துவோம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் குறிப்பிட்ட ஜாதிக்கு குறிப்பிட்ட இனத்திற்கு தாஜா செய்யக்கூடிய அரசியல் நிச்சயம் நடக்காது என்றார்., அனைவருக்கும் மன நீதி கிடைக்கும் அதற்கான மசோதா தான் இதுதமிழகத்தில் ஒரு அடி நிலத்திற்கு உடன்பிறந்த சகோதரர்கள் வெட்டி கொண்டு சாகும் நிலை தான் உள்ளது., நிலத்தை வைத்து சாதிய மற்றும் மதம் மோதலாக மாறும் அளவிற்கு மக்களிடையே மாறியுள்ளது.

வாக்கு வங்கிகளுக்காக மக்களை ஏமாற்றாமல்., சட்ட நடவடிக்கை எடுத்து நில விவகாரத்தில் யாருடைய நிலம் என்பதை ஆய்வு செய்து உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். திமுக பாராளுமன்றத்தில் ஒரு நடிப்பையும்., தமிழகத்தில் ஒரு நடிப்பையும் செய்கிறது.

பாராளுமன்றத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்றுவதற்கு ஒரு பேச்சையும் தமிழகத்தில் ஒரு செயலையும் அதுவும் முதல்வர் கவனம் இல்லாமல் மாவட்ட ஆட்சியரால் செய்ய முடியுமா.? இஸ்லாமிய மக்கள் சிந்திக்க வேண்டும் இது போன்ற எண்ணில் அடங்காத ஆதாரங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.  இதுபோன்று இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கில் இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திமுகவின் இந்த தாஜா வலையில் திமுகவின் ஏமாற்று அரசியலில் இஸ்லாமியர்கள் பலியாகி விடக்கூடாது அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்ல இந்தக் குழு அமைத்து., இஸ்லாமியர்களை அச்சுறுத்தக்கூடிய எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளின் பிரச்சாரத்தை முறியடிக்க இஸ்லாமியர்களின் உண்மையாக காவலனாக பாஜக இருக்கும் என்பதை கொண்டு செல்ல வக்கு வாரிய திருத்த மசோதா சட்ட விழிப்புணர்வு குழு போராடுவோம் என்றார்.

பாஜக வாக்கு வங்கிக்காக எந்த சமூகத்தையும்., மதத்தையும் அரவணைப்பது கிடையாது. எங்களுடைய நோக்கம் என்பது கட்சியின் அடிப்படைக் கொள்கை என்பது தேச முதன்மையானது., தேச நலன் மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் செய்யப்பட்ட துரோகங்களையும் சட்டத்திற்கு புறம்பாக அரசியல் அமைப்புக்கு எதிராக இஸ்லாமியர்களுக்கு திருத்தச் சட்டம் என்று 2013ல் கொடுக்கப்பட்ட மோசமான முன் உதாரணங்களை சுட்டிக்காட்டி நம்மளுடைய சொத்துதான் நமது சொத்தை தவிர இந்துக்களுடைய சொத்தை அபகரிக்கவும் பயன்படுத்தவோ இஸ்லாமியர்கள் கூடாது என்பதை தெரியப்படுத்த தான் இந்த சட்டமே தவிர வாக்கு வங்கிக்காக அல்ல இஸ்லாமிய மக்கள் சிந்திப்பார்கள் என்றைக்கு இஸ்லாமிய சமுதாயம் சிந்திக்கிறதோ இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு இஸ்லாமிய சமூகம் பங்கு வேண்டும் என நினைக்கிறதோ அன்றைக்கு பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.