அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஓட்டுக்கு துட்டு !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

ஐ.பி.எல். கிரிக்கெட் மேட்ச்சுக்கு எப்படி ரசிகர்கள் குஷி ஆவார்களோ, அதுபோல, எந்த கட்சி எவ்வளவு தரப்போகிறது என்று தரம் தாழ்ந்து தேர்தல் திருவிழாவையும் குஷியோடு எதிர்நோக்கும் அவலமும் தமிழகத்தை பீடித்த அரசியல் நோயாக மாறி பலகாலம் ஆகிவிட்டது.
இந்தமுறை தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளிடமும் கூச்சமின்றி பணத்தையும் பரிசு பொருட்களையும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில், உரிமையோடு லோக்கல் நிர்வாகிகளிடம் தகராறும் செய்திருக்கிறார்கள். “கொள்ளையடிச்ச பணத்துல இருந்துதானே கொடுக்கிறாங்க. இது நம்ம பணம்தானே?” என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் மேலோங்கியிருந்திருக்கிறது.
துட்டு ஒரு பக்கம் வாங்கிட்டு, ஓட்டை வேறொரு பக்கம் மாற்றிக் குத்தி, ”பணநாயகத்துக்கு” பாடம் புகட்டிவிட்டதாகவே சொல்கிறார்கள். இதற்கு எடுப்பான உதாரணமாக அமைந்துவிட்டது நான்கு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அந்த மூன்றெழுத்து மாவட்டத்தின் அனுபவம். அந்த மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்தியாகவும், மண்ணின் மைந்தனாகவும் கருதப்படும் ஏழெழுத்தில் ஏழுமலையான் பெயரை கொண்ட அந்த “ஜி”-யின் ஜாலங்கள் தவிடுபொடியாகிப் போனதுதான் பெரும் சோகம்.
குறிச்சியான இடைத்தேர்தலில் ஆரம்பித்த ஜி-யின் ஜாலம், நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் உச்சத்தை தொட்டுவிட்டது. இந்தமுறை சொந்த மாவட்டத்தைவிட்டு பக்கத்து மாவட்டத்துக்கு மாறியிருந்தாலும், சொந்த மாவட்டத்தை விட்டுக் கொடுக்காமல் செம்மையாகவே கவனித்துக் கொண்டார் அந்த ”ஜி.”
தினந்தோறும் காலை, மாலை என இருவேளை தேர்தல் பிரச்சாரம் மாவட்டம் முழுவதும் களை கட்டியது. நூறுநாள் வேலைத்திட்டத்துக்கான அட்டையைப் போலவே, க்யூஆர் கோடுடன் கூடிய அட்டைகள் வழங்கப்பட்டு பக்கா கார்ப்பரேட் மயமாகியிருந்தது தேர்தல் பிரச்சார வியூகங்கள். தலைக்கு 300 வீதம் கொடுத்திருக்கிறார்கள்.
குறிச்சி மற்றும் குவாரிகள் நிறைந்த தொகுதியில், ஓட்டுக்கு மூன்று நோட்டு வரை கொடுத்திருக்கிறார்கள். சொந்தக்கட்சிக்காரன் எதிர்க்கட்சிக்காரன் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், சகட்டு மேனிக்கும் தொகுதியில் ஓட்டு இருந்தாலே துட்டு என்ற ரேஞ்சுக்கு வாக்காளர் எனும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிருக்கிறார்கள். இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் எப்படியும் 80 பெரிய பாக்ஸ் வரையில் வாரியிறைத்திருப்பதாக தகவல்.
அடுத்து, புல்லாங்குழல் கடவுள் பெயரை கொண்ட தொகுதியில், ஓட்டுக்கு நாலு நோட்டை கொடுத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சி தரப்பும் தலைக்கு ரெண்டு நோட்டை களத்தில் இறக்கிவிட, இரவோடு இரவாக வெள்ளிக்கொலுசை கொடுத்து சரிக்கட்ட வேண்டிய நிலைமை ஜி தரப்புக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த வகையில், இந்த ஒரு தொகுதியில் மட்டும் பெரிய பாக்சில் 100 பாக்ஸ் பிடித்திருக்கும் என்கிறார்கள்.
ஓட்டுக்கு பணம் குறித்த புகார் - 100 நிமிடங்களில் நடவடிக்கைஇதையெல்லாம்விட, தேர்தல் திருவிழாவில் நல்லாவே மஞ்சள் குளிச்சது, மூன்றெழுத்து மாவட்ட தொகுதிதான் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பாகவே, தீபாவளி, பொங்கல் விஷேசங்களுக்கு வீடுதோறும் பண்ட பாத்திரங்களை விநியோகம் செய்து மண்ணின் மைந்தராகவே மாறியிருந்தார் ஜி.
இதில் சுவாரசியமான தகவலும் இருக்கிறது. மூன்றெழுத்து மாவட்டத்தில் பிறந்து பல்வேறு மாவட்டங்களுக்கு திருமணமாகி சென்ற பெண்கள்; தொழில் நிமித்தமாக இடம் பெயர்ந்தவர்கள்கூட, வாக்காளர் பட்டியலிலிருந்து தொகுதியை மாற்றம் செய்யவில்லை. மண்ணின் மைந்தரான ஜி-யின் தேர்தல் கால மாயாஜாலத்துக்காக காத்திருந்தார்கள்.
ஆனால், அது பெரும் ஜாக்பாட்டாக அமையும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். சுளையாக, 12 பெரிய நோட்டுகளை வாரியிறைத்துவிட்டார் அந்த ஜி. இதுக்கு கொஞ்சமாவது ஈடு கொடுத்தாக வேண்டுமென்ற நிலையில் போட்டிக் கட்சியும் தன் பங்குக்கு ஆறு நோட்டை எடுத்து வீச, உஷாரான ஜி – தரப்பு இரவோடு இரவாக அரை கிராம் காயினை களத்தில் இறக்கியது. இதை கண்டு அரண்டு போன போட்டி கட்சியும் தன் பங்குக்கு 4 கிராம் வெள்ளி காயினை கொடுத்து ஈடேற்றியிருக்கிறது. இந்த வெள்ளிக் காயின் விநியோகம், தங்க காயின் விநியோகம் எல்லாம் நடுசாமத்தில் நடந்த கூத்துகள். சில இடங்களில், நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கொடுத்திருக்கிறார்கள் இரண்டு தரப்பிலுமே. இந்த மூன்றெழுத்து மாவட்டத்தின் ஒரு தொகுதிக்கு மட்டுமே எப்படியும் பெரிய பாக்சில் 300 பாக்ஸ் வரை கரைந்து போயிருக்கும் என்கிறார்கள்.
ஆக எப்படி பார்த்தாலும், மண்ணின் மைந்தரான ஜி தரப்பில் 500 பெரிய பாக்சுக்கு குறைவில்லாமல் வாக்காளர்களை குளிப்பாட்டியிருக்கிறார்கள். இந்தளவுக்கு இல்லையென்றாலும், போட்டிக் கட்சி சார்பில் இதில் சரிபாதியை செலவிட்டிருப்பார்கள். ஆனால், என்ன இவ்வளவும் செய்து, தோல்வியை தழுவியது மட்டுமின்றி, சில தொகுதிகளில் மூன்றாமிடத்துக்கும் தள்ளப்பட்டதுதான் சோகத்திலும் பெரும் சோகம்.
வாக்குக்கு பணம் கொடுக்கும் ”ஃபார்முலா” தமிழகத்தில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஓட்டுக்கு கொடுக்கப்படும் துட்டு எந்த வகையிலும் வெற்றித் தோல்வியை தீர்மானிக்காது என்ற பாடத்தை, தமிழக அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்துவிட்டது, மூன்றெழுத்து மாவட்டம்.

2026 June 11 - 17 Angusam Book

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

—    அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.