அங்குசம் சேனலில் இணைய

திருச்சிராப்பள்ளி மாவட்டம் காவல் நிலையங்களுக்கு முதலுதவி பெட்டி வழங்கும் விழா !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு Neuro One மருத்துவமனை மற்றும் ரத்னா குளோபல் மருத்துமனை இணைந்து முதலுதவி பெட்டி வழங்கும் விழா இன்று (09.04.2025) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருமாங்கல்யம் மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர். வீ. வருண்குமார், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டார். மேலும் Neuro One மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் விஜய்குமார், குளோபல் மருத்துமனையின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் பிரவீன் தாஸ் மற்றும் மகப்பேறு, மகளிர் நல மருத்துவர் பிரியா பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

முதலுதவி பெட்டி வழங்கும் விழா மேற்படி விழாவில் காவலர்களுக்கு, முதலுதவி பெட்டியில் உள்ள உபகரணங்கள் பற்றியும், அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் மருத்துவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். திருச்சி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகள் என மொத்தம் 53 காவல் நிலையங்களில் இருந்தும் பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டு முதலுதவி பெட்டிகளை அவர்களிடம் அளிப்பதற்கான முக்கியத்துவம் பற்றி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களால் விளக்கி அனைத்து காவல்நிலைய பொறுப்பு பெண் காவலர்களிடம் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டன. மேற்படி முதலுதவி பெட்டிகள் காவல் நிலையங்களில் உள்ள வரவேற்பு மேசைகளில் வைத்து காவலர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் பயன்படும் வகையில் வைக்க அறிவுறுத்தப்பட்டது.

முதலுதவி பெட்டி வழங்கும் விழா
முதலுதவி பெட்டி வழங்கும் விழா

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் டாக்டர். வீ. வருண்குமார், இ.கா.ப., அவர்கள் முதலுதவி சிகிச்சையின் முக்கியத்துவம் பற்றியும், காவலர்கள் எந்தெந்த சூழ்நிலைகளில் முதலுதவி சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் பாம்பு கடி, வெறிநாய் கடி, வெட்டுக்காயங்கள், விபத்துகளின் போது உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி செய்முறைகள் பற்றி காவலர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும் திருச்சி மாவட்டம் மட்டும் அல்லாது திருச்சி சரகத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

முதல் உதவி பெட்டியில் உள்ள உபகரணங்கள் மற்றும் பயன்பாடுகள்:

  1. Tourniquet (அழுத்தப்பட்ட பட்டி) ரத்தம் அதிகமாக கொட்டுவதை தற்காலிகமாக தடுக்க மற்றும் பாம்பு கடியில் விஷம் ரத்தத்தில் கலக்காமல் கட்ட பயன்படுகிறது.
  2. Bandage Roll (कली) கட்டுப்படுத்த. காயங்களை மூட மற்றும் கசிவை
  3. Cotton (பஞ்சு) காயங்கள் சுத்தம் செய்ய மற்றும் மருந்து தேய்க்க.
  4. Tincture (டின்க்சர்) கிருமிகளை அழிக்க காயங்களுக்கு தடவ.
  5. Roller Bandage (உருட்டும் கட்டு துணி) கட்டுகளை உறுதியாக பிடிக்க உதவும்.
  6. Antiseptic Cream/Solution (பாதுகாப்பு கிரீம்/திரவம்) – கிருமிகள் எதிராக காயங்களை பாதுகாக்க.
  7. Wound Wipes (காயம் துடைக்கும் துணி) – காயங்களை சுத்தம் செய்ய.
  8. Wooden Splint ( ) உறுதிப்படுத்தல். எலும்பு முறிவுகளுக்கு தற்காலிக
  9. Gloves (கையுறை) – தொற்றுகளை தவிர்க்க கையாளும் போது அணிய.
  10. Scissor (கத்தரிக்கோல்) – துணிகளை வெட்ட
  11. Triangular Bandage ( 6 काली) கை சுளுக்கு போன்ற பகுதிகளை கட்டியிட, ஸ்லிங் போல் பயன்படுத்த.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.