அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தனியார் பள்ளி காண்ட்ராக்ட் தகராறு :  தாளாளர் உட்பட நான்கு பேருக்கு விழுந்த தர்மஅடி ! வைரலான வீடியோ !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் உட்பட நான்கு பேரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பழனிசெட்டிபட்டி பகுதியில் சி.இ.ஓ.ஏ. என்ற தனியார் ஆங்கிலப்பள்ளி 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தனியார் பள்ளி காண்ட்ராக்ட் தகராறு இந்தப் பள்ளியில் வளாகத்தில் அத்துமீறி நுழைந்து பள்ளி தாளாளர் உட்பட நான்கு பேரை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருக்கிறது. பழனிசெட்டிபட்டி பகுதியில் செயல் பட்டு வந்த பெனடிக் என்ற ஆங்கில பள்ளி நிர்வாகி செல்வகணபதி என்பவர்,  சிஇஓஏ பள்ளி நிர்வாகத்திற்கு 2033 ஆம் ஆண்டு வரை ஒப்பந்த அடிப்படையில்  பள்ளியை நடத்த எழுதி கொடுத்துள்ளார்.கடந்த நான்கு ஆண்டுகளாக சிஇஓஏ பள்ளி நிர்வாகம் பள்ளியை நன்றாக நடத்தி வருகிறது. பள்ளி மாணவர் சேர்க்கை அதிகரித்து பள்ளி  வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தனியார் பள்ளி காண்ட்ராக்ட் தகராறு இந்நிலையில், ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு பள்ளியை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வருமாறு சிஇஓஎ பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு சி இ ஓ ஏ பள்ளி நிர்வாகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து எழுதிக் கொடுக்க மறுத்து விட்டது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளியை ஒப்பந்த அடிப்படையில் எழுதிக் கொடுத்த பெனடிக் பள்ளி நிர்வாகி செல்வகணபதி, கிருஷ்ணன், பாண்டீஸ்வரன், அடையாளம் தெரியாத 7 பேர் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி வளாகத்திற்கு உள்ளே நுழைந்து சி இ ஓ ஏ பள்ளித் தாளாளர் ஸ்டாலின் மைக்கில், கண்ணன், கனிராஜ், முருகன் உள்ளிட்ட நான்கு பேரை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.