அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திருச்சிராப்பள்ளி, ஐமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இனிகோ இருதயராஜ் பிறந்தநாள்

மேலும், இம்மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, செவிலியர், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுய விவரக்குறிப்பு (Bio-data), அனைத்து கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் வேலை நாடுநர்கள், தமிழ்நாடு அரசின் என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் https://www.tnprivatejobs.tn.gov.in பயன்பெறலாம்.

யாவரும் கேளீர்

மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 என்ற தொலைபேசி/அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.