அங்குசம் சேனலில் இணைய

அங்குசம் பார்வையில் ‘பிளாக்மெயில்’

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு : ’ஜே.டிஎஸ்.பிலிம் ஃபேக்டரி’ ஜெயக்கொடி  அமல்ராஜ். டைரக்ஷன் : மு.மாறன். ஆர்ட்டிஸ்ட் : ஜி.வி.பிரகாஷ்குமார், தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்துமாதவி, ரமேஷ் திலக், ஹரிப்ரியா,  முத்துக்குமார், லிங்கா, டைரக்டர் தமிழ்,  ரெடின் கிங்ஸ்லி, ஒளிப்பதிவு : கோகுல் பினோய், பாடல்கள் இசை : ஜி.வி.பிரகாஷ், பின்னணி இசை : சாம் சி.எஸ். “ஒத்துக்கிறியா” பாடல் இசை : டி.இமான், எடிட்டிங் : சான் லோகேஷ், ஆர்ட் டைரக்டர் ; ராம், எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர் : தயாளன் பழனி, தமிழ்நாடு ரிலீஸ் :தனஞ்செயன், பி.ஆர்.ஓ : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல் நாசர்.

முத்துக்குமார் நடத்தும் மருந்து சப்ளை செய்யும் கம்பெனியில் வேன் டிரைவராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மருந்துப் பெட்டிகளுடன் ஒரு பார்சலைக் கொடுத்து இன்னொரு இடத்தில் சேர்க்கச் சொல்கிறார் முத்துக்குமார். அதை எடுத்துக் கொண்டு போகும் வழியில், கர்ப்பிணியாகிவிட்ட காதலியை [தேஜு அஸ்வினி] ஆஸ்பத்திரி செக்கப்புக்கு கூட்டிப் போகிறார் ஜி.வி.பி. திரும்பி வந்து பார்த்தால் மருந்துகளுடன் வேனையே திருடிக் கொண்டு போய்விடுகிறான் ஒருத்தன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பிளாக்மெயில்
பிளாக்மெயில்

பிளாக்மெயில் வேனுடன் அந்த பார்சலும் வரலேன்னா உன்னோட லவ்வரைக் கொன்றுவிடுவேன் என தேஜு அஸ்வினியைக் கடத்தி வைத்துக்ன்கொண்டு  பிளாக்மெயில் பண்ணுகிறார் முத்துக்குமார். 50 லட்ச ரூபாய் பார்சலுக்காக பணக்காரர் ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளின் ஐந்து வயது குழந்தையை கடத்த திட்டம் போட்டுக் கொடுக்கிறார் ஜிவிபி.யின் நண்பரான ரமேஷ் திலக். குழந்தையை இவர்கள் இருவரும் கடத்தி ஸ்ரீகாந்த்தை பிளாக்மெயில் பண்ணுகிறார்கள். ஆனால் இவர்கள் அந்தக் குழந்தையைக் கடத்தவில்லை. வேறு யார் குழந்தையைக் கடத்தி பிளாக்மெயில் பண்ணுவது என்பதை கோயம்புத்தூர் கதைக்களத்தில்  இரண்டு மணி நேரம் பரபர திரைக்கதையுடன் விறுவிறுப்பாக போவது தான் இந்த ‘பிளாக்மெயில்’. அதிக பில்டப் இல்லாமல், அலட்டல் இல்லாமல் அளவாகவும் நிறைவாகவும் நடித்துள்ளார் ஜி.வி.பி. இரண்டு சீன்களில் மட்டுமே, அதுவும் தேவையான இடத்தில் மட்டுமே சண்டை போடுகிறார். மற்ற பல சீன்களில் முத்துக்குமாரிடமும் அவரது அடியாட்களிடமும் அடிவாங்கத் தான் செய்கிறார். ஹீரோயின் தேஜு அஸ்வினியும் ஓகே தான்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இவர்களுக்கு அடுத்து மனதில் நிற்பவர் ரமேஷ் திலக் தான். “துரோகம், அநியாயம்னு பேசுறதெல்லாம் வேஸ்ட். நியாயம், தர்மம்னு சொல்லிப் பாரு, எவனாவது உன்னை நம்பி ஐநூறு ரூபாய் தருவானா?” ஜி.வி.பி.யிடம் ரமேஷ் திலக் பேசும் இந்த வசனம் நிதர்சனம். சினிமா சான்ஸ் தாமதமான கேப்பில் டைரக்டர் மாறன் ரொம்பவே அனுபவப்பட்டிருப்பார் போல. அதன் எஃபெக்ட் தான் இந்த டயலாக்.

பிளாக்மெயில்
பிளாக்மெயில்

முத்துக்குமார்-ரெடின் கிங்ஸ்லி கூட்டணியை காமெடிக்கும் இன்னும் அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம். முத்துக்குமாருக்கு இந்த பிளாக்மெயில் நல்ல அடையாளம். கோடீஸ்வரராக ஸ்ரீகாந்த், அவரது மனைவியாக பிந்துமாதவி இவர்களின் கேரக்டர் படத்திற்கு நல்ல பலம். பிந்து மாதவி நடிப்பைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. பிந்துமாதவியின் மாஜி லவ்வர் லிங்காவின் பிளாக்மெயில் எபிசோட் தான் கொஞ்சம் இழுவையாப் போச்சு. கேமராமேன் கோகுல் பினோயின் நைட் லைட்டிங்கும் சாம் சி.எஸ்.சின் பேக்ரவுண்ட் ஸ்கோரும் பிளாக்மெயிலுக்கு க்ரைம் ரேட்டிங்கை ஏத்துகிறது.

குழந்தை கடத்தலை பல்வேறு ஸ்பேஸ்களில் கனெக்ட் பண்ணி, கடைசியில் ஜி.வி.பி.யிடம் கொண்டு வந்து ஸ்ரீகாந்த்-பிந்துமாதவி தம்பதிகளிடம் குழந்தையை ஒப்படைப்பது என பிரிலியண்டான ஸ்கிரிப்டை பெஸ்டாகவே படமாக்கி ‘பிளாக்மெயில்’ பண்ணியுள்ள டைரக்டர் மாறனுக்கு சபாஷ்.

 

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.