அங்குசம் சேனலில் இணைய

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பன்னாட்டு வேதியியல் மாநாட்டுத் தொடக்க விழா !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் கிரைஸ்ட் கல்லூரி வேதியியல் ஆய்வுத் துறைகள் இணைந்து இரண்டு நாள் பன்னாட்டு வேதியியல் ஆய்வு மாநாட்டை நடத்துகின்றன.

வேதியல் மாநாடுசெயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில்  கல்லூரிச்செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., முதல்வர் அருள்முனைவர் சி‌. மரியதாஸ், சே.ச., பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் முனைவர் பிரின்சி மெர்லின், கிரைஸ்ட் கல்லூரிப் பேராசிரியர் அருள்முனைவர் ஜிஜோ பிரான்சிஸ், ஹைதரபாத் லாரன்டி தகவல் தொழில்நுட்ப மையத்தின் நிறுவுனர் ஷியாம் மேகா ஷர்மா ஆகியோர்  பங்கேற்றுச் சிறப்பித்தனர்‌.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

வேதியல் மாநாடுபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வேதியியல் அறிஞர் பேராசிரியர் பியர் டிக்ஸ்னஃப் மற்றும் தாய்லாந்து, சுலோவோக்கியா உள்ளிட்ட  நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள 14  வேதியியல் ஆராய்ச்சியாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் தங்கள் ஆய்வுரைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

வேதியல் மாநாடுவேதியியல் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது. முன்னதாக செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் டென்னிஸ் ஆரோக்கியராஜ் வரவேற்புரை வழங்கினார். பிஷப் ஹீபர் கல்லூரி வேதியியல் துறைத்தலைவர் முனைவர் வயலட் தயாபரன் மாநாட்டு நோக்கவுரையாற்றினார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இம்மாநாட்டின் முதல்நாள் நிறைவில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் சிறப்புரையாற்றுகிறார்.‌ இரண்டாம் நாள் மாநாடு பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது. பல பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 1013 பங்கேற்பாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

 

—     ஆரோக்கியராஜ் & ஆதன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.