அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

’ கிஸ்’ ஃபங்ஷனில் தயாரிப்பாளர் ‘மிஸ்ஸிங்’

திருச்சியில் அடகு நகையை விற்க

‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் டைரக்‌ஷனில் உருவாகி, வரும் 19-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘கிஸ்’ என்ற படம். இதில் ஹீரோவாக கவின், ஹீரோயினாக ப்ரீத்தி அஸ்ரானி, மற்ற கேரக்டர்களில் பிரபு, வி.டி.வி கணேஷ், ஷக்தி, ஆர்ஜே விஜய் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன், இசை : ஜென் மார்ட்டின், எடிட்டிங் : ஆர்.சி.பிரணவ், ஆர்ட் டைரக்டர் : மோகன மகேந்திரன். பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா & ஏ.அப்துல்நாசர்.

நாளை  படம் ரிலீசாவதால்,  [ செப்.16] இரவு சென்னை சத்யம் தியேட்டரில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிழச்சி நடந்தது. இதில் கேமராமேன், எடிட்டர், ஆர்ட் டைரக்டர், நடிகர்கள் ஆர்ஜே விஜய், ஷக்தி ஆகியோர் வழக்கம் போல டைரக்டருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி சொன்னார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கிஸ் மூவிபடத்தின் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானி,

“இந்தப் படம் செம ஜாலியாக இருக்கும். டைரக்டர் சதீஷ் மாஸ்டரின் ஃபீமேல் வெர்ஷன் தான் எனது கேரக்டர். ‘அயோத்தி’ படத்திற்கு நேரெதிராக இந்தப் படத்தில் எனது கேரக்டர் இருக்கும்”.

https://www.livyashree.com/

விடிவி கணேஷ்,

“தூக்கத்தில் கூட ஏதாவது சேட்டை செய்து கொண்டே இருக்கும் ஹைப்பான ஆளுதான் டைரக்டர் சதீஷ். இவரை விஜய்க்கு ரொம்பவே பிடிக்கும். விஜய்யை இவருக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தின் ஹீரோயின் ப்ரீத்தி அஸ்ரானியுடன் எனக்கு எந்த சீனும் வைக்காமல்  கடைசி வரை கண்லயே காட்டலேன்னா சதீஷ் எப்படிப்பட்ட ஆளுன்னு  பார்த்துக்கங்க.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கிஸ் மூவிஇப்பதான் இந்தப் புள்ளய பார்க்குறேன். டான்ஸ் மாஸ்டரா இருந்து டைரக்டராகியிருக்கான். அதனால் மீடியா நண்பர்கள் கொஞ்சம் பொய் கலந்து எழுதி பார்த்து எழுதி, அவனுக்கு சப்போர்ட் பண்ணுங்க” என ஜாலியாக கையெடுத்துக் கும்பிட்ட விடிவி கணேஷ், தனக்கு கிடைத்த முதல் ‘கிஸ்’ பத்தி தனக்கேயுரிய பாடிலாங்குவேஜுடனும் டயலாக் டெலிவரியுடனும் பேசி ஒட்டு மொத்த தியேட்டரையே கலகலப்பாக்கினார்.

டைரக்டர் சதீஷ் கிருஷ்ணன்,

“கவினின் முதல் படத்துக்கு நான் தான் டான்ஸ் மாஸ்டர். எனது டைரக்‌ஷனில் முதல் படத்துக்கு கவின் தான் ஹீரோ. படத்தின் தயாரிப்பாளர் ராகுல் சாருக்கும் என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்துட்டு நல்ல சப்போர்ட் பண்ணுங்க”.

கிஸ் மூவிஹீரோ கவின்,

“எங்களது வேண்டுகோளுக்கு சம்மதித்து ஐந்து நிமிட காட்சிக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்த அண்ணன் விஜய் சேதுபதிக்கும் நன்றி. எங்களையெல்லாம் ஊக்கப்படுத்திய தயாரிப்பாளர் ராகுல் சாருக்கு நன்றி. டைட்டிலில் தான் கிஸ் இருக்கே தவிர, உங்கள் குடும்பத்துடன் பார்க்கலாம். அதற்கு நானும் சதீஷும் க்யாரண்டி”.

தான் தயாரிக்கும் படங்களோ, வாங்கி வெளியிடும் படங்களோ, அதன் புரமோவுக்கு வரும் பழக்கம் இல்லாதவர் ராகுல். அந்த வரிசையில் இந்த ‘கிஸ்’ புரமோவிலும் மிஸ்ஸிங்.

 

  —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.