அங்குசம் சேனலில் இணைய

மின்வாரிய ஆய்வாளரை பொறிவைத்துப் பிடித்த இலஞ்ச ஒழிப்புப் போலீசார் !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்றித் தருவதற்கு ரூ1,500/- இலஞ்சம் கேட்ட மின்வாரிய வணிக ஆய்வாளர் இலஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான முத்தையா, தனது வீட்டு மனையில் கட்டப்பட்ட கட்டிடத்திற்கு பெறப்பட்ட தற்காலிக மின் இணைப்பை நிரந்தர வீட்டு மின் இணைப்பாக மாற்றித்தருமாறு தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அவ்வாறு, நிரந்தர இணைப்பாக மாற்றித்தருவதற்கு ரூ1500/- இலஞ்சப்பணமாக கேட்டிருக்கிறார், மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றும் சரவணன்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

மின்வாரிய ஆய்வாளர் கைது
மின்வாரிய ஆய்வாளர் கைது

இந்நிலையில், கால்நடை மருத்துவர் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்ததையடுத்து, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில் வகையாய் சிக்கியிருக்கிறார் சரவணன்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கையும் களவுமாக பிடிபட்ட சரவணன் இலஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், தாத்தையங்கார்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் விசாரணையை தொடர்ந்து வருகிறார்கள், இலஞ்ச ஒழிப்புப் போலீசார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.