அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்ல…..

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  ஏ. எம்.வி. பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

எஸ். கார்த்தீஸ்வரனுடன் லிவிங்ஸ்டன் , இமான் அண்ணாச்சி,  பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம்.ஆர். அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆர்.கே. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி.சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாக பங்காற்றி யுள்ளனர்.  படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

நிர்வாகம் பொறுப்பல்லடிசம்பர் மாதம் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நவம்பர் 20- ஆம் தேதி காலை நடந்தது. இதில் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் என 27 பேர் கலந்து கொண்டு பேசினார்கள். அதில் சிலரின் சுருக்கமான பேச்சு…

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன்,

”சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த இந்த படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி”.

தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி,

“எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை  பாராட்டுகிறேன்”.

நடிகை மிருதுளா சுரேஷ்,

“இந்தப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும்”.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா,

“இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்”.

இயக்குநர் கௌரவ் நாராயணன்,

HARINI JEWELLERS TRICHY

“சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது. அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும்”.

நிர்வாகம் பொறுப்பல்லஏ.எம்.வி. பிரபாகர் ராஜா,

”இந்த நிகழ்விற்கும், மேடையில் இருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாக வும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன்.

நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும் “.

இயக்குநர்& ஹீஞ எஸ். கார்த்தீஸ்வரன்,

”எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்தை பத்து பாகமாக் கூட எடுக்கலாம். இதில் என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்தப் படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி”.

 கே. பாக்யராஜ்

“மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள்.

மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.

இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. “நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன்” என்றார்.  அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம்.  இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.‌

உண்மைச் சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும்”.

—   ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.