அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரெஸ்டுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம்! – தலைமைக்காவலருக்கு சிறை தண்டனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு ரோட்டில் நியூ அகிலாண்டேஸ்வரி பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வரும், திருவெறும்பூர் தாலுகா காந்திநகர் 8வது தெருவைச் சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குணசேகரன் (இறப்பு 14.02.2019) என்பவரிடம், கடந்த 12.06.2009 அன்று பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலர் ராமசாமி என்பவர், புகார்தாரரிடம் உன்மேல் டெல்லியில் இருந்து அரஸ்ட் வாரண்ட் வந்திருக்கு என்று பொய்யாக கூறி அரெஸ்ட் செய்யாமல் இருக்க ரூ.10000/- லஞ்சமாக கேட்டுள்ளார்.

அதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகரன் கடந்த 13.06.2009 அன்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் சூரக்குமரன் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவின் மீது காவல் ஆய்வாளர்  சூரக்குமரன் அவர்கள் வழக்கு பதிவு செய்து பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது புகார்தாரர் குணசேகரணிடமிருந்து பாய்லர் பிளாண்ட் காவல் நிலைய தலைமைக்காவலர் எதிரி ராமசாமி லஞ்சப்பணம் ரூ.10000/-கேட்டு பெற்ற போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ராமசாமி
ராமசாமி

இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடித்து இன்று 26.12.2025 எதிரி ராமசாமி, வயது 59/2025, (நிரந்தர பணிநீக்கம்) முன்னாள் தலைமைகாவலர் 310, பாய்லர் பிளாண்ட் காவல் நிலையம், திருவெறும்பூர், திருச்சி மாவட்டம் என்பவருக்கு, ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-ன் படி 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும் மற்றும் பிரிவு 13(2) r/w 13(1)(d)-ன் படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000/-ம் அபராதம், அபராதத்தை செலுத்த தவறினால் 3 மாத சிறை தண்டனையும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும், திருச்சி ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நிதீபதி புவியரசு  தீர்ப்பு வழங்கினார்கள். இவ்வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர்கள் சாட்சிகளை ஆஜர் செய்தும், அரசு சிறப்பு வழக்குரைஞர் கோபிகண்ணன் அவர்கள் ஆஜராகி தண்டணை பெற்று தர உதவி புரிந்துள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.