அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

JCI RockTown மற்றும் Ideal Foundation இணைந்து நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் JCI RockTown, திருச்சி மற்றும் Ideal Foundation, திருச்சி இணைந்து பாரம்பரிய பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழா 14.01.2026 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கிராம குழந்தைகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பொங்கல் வைத்தல் நிகழ்வுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கப்பட்டது. பொங்கல் திருநாளின் பண்பாட்டு மற்றும் சமூக முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
பாரம்பரிய பொங்கல்JCI RockTown தலைவர் – Jc. Dr. S. முத்துக்குமார், (Assistant Professor)  அவர்கள் தனது உரையில், “கிராமப்புற குழந்தைகளின் கல்வி, நலன் மற்றும் சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதே JCI-யின் முக்கிய நோக்கம். இதுபோன்ற சமூக நிகழ்ச்சிகள் குழந்தைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உருவாக்குகின்றன” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக R. ராஜமாணிக்கம் (TNPL), சமூக ஆர்வலர், தாயனூர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சியில் கல்வி, ஒழுக்கம் மற்றும் பாரம்பரிய விழாக்களின் பங்கு மிக முக்கியமானது என வலியுறுத்தினார். Ideal Foundation நிறுவனர் உரை (Founder’s Address) இதனைத் தொடர்ந்து  Jc. மோகன்ராஜ் – Vice President,  நிறுவனர் உரையாற்றினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

பாரம்பரிய பொங்கல்அவர் தனது உரையில், “கிராமப்புற குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்காக கல்வி, ஊட்டச்சத்து மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வு அவசியம். JCI RockTown போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது சமூக சேவைக்கு புதிய வலிமையை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.
Dr. சிவகுமார் சிறப்பு உரையாற்றினார். அவர் குழந்தைகளின் திறன் மேம்பாடு, கல்வி வழிகாட்டுதல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்பதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து Dr. S. ஸ்ரீதேவி, (Secretary) உரையாற்றி, குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சி மற்றும் சமூக விழிப்புணர்வு குறித்த கருத்துகளை பகிர்ந்தார். மற்ற சிறப்பு உரைகள் பின்வருவோர் சிறப்பு உரைகள் வழங்கினர். Jc. ஸ்வாதிலட்சுமி – Director,  Jc. K. U. ரிஷி – Treasurer, அனைவரும் குழந்தைகளை ஊக்குவிக்கும் கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விளையாட்டு போட்டிகள்
குழந்தைகளுக்காக பல்வேறு பாரம்பரிய மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள். வழங்கப்பட்டது.
பாரம்பரிய பொங்கல்சக்கரை பொங்கல் உணவு வழங்கல் விழாவின் முக்கிய அம்சமாக, அனைவரும் இணைந்து இலை வைத்து சக்கரை பொங்கல் உண்டு மகிழ்ந்தனர். இது சமூக ஒற்றுமை மற்றும் பகிர்வு பண்பாட்டை எடுத்துக்காட்டியது.
நிகழ்ச்சியின் நிறைவாக Jc. ரஞ்சித் குமார், (Public Relations Director, JCI RockTown) நன்றி உரை வழங்கினார். விழாவிற்கு ஒத்துழைத்த சிறப்பு விருந்தினர்கள், Ideal Foundation, JCI உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தாயனூர் கிராம மக்கள் அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி Jc. M. அறிவழகன் – Secretary, மற்றும் Jc. Dr. S. ஸ்ரீதேவி – Joint Secretary ஆகியோரின் ஒருங்கிணைப்பில், JCI உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.