அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அமெரிக்காவின் டாலர் அரசியல் !

திருச்சியில் அடகு நகையை விற்க

‘உழைப்பவனுக்கு ஒரு நீதி, அதிகாரம் படைத்தவனுக்கு ஒரு நீதி “என்பதுதான் உலக அரசியலின் கசப்பான உண்மை. அமெரிக்காவின் டாலரை வைத்து உலகை ஆளும்  தந்திரமான “பொருளாதார காலனி ஆதிக்கத்தை…”இந்த துரோகத்தை” மற்ற நாடுகள் ஏன் அமைதியாக ஏற்றுக்கொள்கின்றன?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை டாலருடன் இணைத்துக் கொண்டன. இன்று உலக வர்த்தகத்தில் (கச்சா எண்ணெய், தங்கம், மென்பொருள்) சுமார் 80% டாலரில்தான் நடக்கிறது.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

எந்த நாடு எந்த நாட்டோடு வியாபாரம் செய்தாலும், நடுவில் டாலர் வந்துதான் போகும். அமெரிக்காவுக்கு மட்டுமே  டாலரை அச்சிட முடியும். மற்ற நாடுகள் அச்சிட்டால்  அது சட்டவிரோதம்.  இதில் கொடுமை அமெரிக்கா எவ்வளவு வேணாலும் அச்சிடலாம். மற்ற நாடுகள் அச்சிட்டால் அது கள்ளப்பணம்; அவர்கள் அச்சிட்டால் அது ‘பொருளாதாரக் கொள்கை’!

இந்தியாவுக்கு பெட்ரோல் வேண்டும் என்றால், நாம் எதையாவது அமெரிக்காவுக்கு விற்றாவது, தங்கத்தை கொடுத்தாவது தான்  டாலர் சம்பாதிக்க வேண்டும்.

முதல்வர் பிறந்தநாள்

ஆனால், அமெரிக்காவுக்கு பெட்ரோல் வேண்டும் என்றால், அவர்கள் எதையும் விற்கத் தேவையில்லை. ஒரு காகிதத்தில் ‘டாலர்’ என்று அச்சிட்டு கொடுத்துவிட்டு பெட்ரோலை வாங்கிக் கொள்ளலாம். மற்ற நாடுகள் உழைத்து, விற்று டாலரைச் சம்பாதித்தால் அமெரிக்கா டாலரை அச்சிட்டு உலகப் பொருட்களைச் சம்பாதிக்கிறது.

டாலர் அரசியல் !மற்ற நாடுகள் பணத்தை அதிகமாக அச்சடித்தால், அந்த நாட்டின் பணம் மதிப்பிழந்து போகும் பொருள்களோட விலை ஏறும்.. சர்வதேச சந்தையில் மதிப்பிழந்து போகும் . இலங்கை, ஜிம்பாப்வே எல்லாம் இந்த சூழலில் மாட்டிக் கொண்ட நாடுகள் தான்.

அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்திற்குப் பின்னால் இருப்பது அந்த நாட்டின் பிரம்மாண்டமான ராணுவம்.  “எங்கள் டாலரை நீங்கள் மதிக்கவில்லை என்றால், உங்கள் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்” என்ற மறைமுக மிரட்டல் எப்போதும் உண்டு. லிபியாவின் கடாபி, ஈராக்கின் சதாம் உசேன் டாலருக்கு எதிராகச் செயல்பட முயன்றதால்   அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டதை நாம் பார்த்திருக்கிறோம்.

உலக வர்த்தகத்திற்கான வங்கிக் கட்டமைப்பு (SWIFT) அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் டாலரைத் தவிர்த்துவிட்டு வேறொரு கரன்சிக்கு மாறினால், சர்வதேசச் சந்தையில் நம்மால் எளிதாக வியாபாரம் செய்ய முடியாது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், டெஸ்லா போன்ற அமெரிக்காவின் தொழில்நுட்பங்களைச் உலக நாடுகள் சார்ந்திருப்பதால், அவர்கள் டாலரில் கொடுக்கப்படும் விலையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இந்தப் பேரண்டத்தின் தர்மம் படி ஏமாற்று வேலை நீண்ட காலம் நீடிக்காது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பவுண்ட் (Pound) உலகை ஆண்டது. இன்று அது சாதாரண கரன்சியாகிவிட்டது. அதுபோலவே, அமெரிக்காவின்  டாலரும் மாறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் கடன்  சுமார் $38.5 டிரில்லியன் டாலர்… சுமார் 126% முதல் 143% வரை. நூறு ரூபாய் ஒரு மனிதர் சம்பாதித்தால் 143 ரூபாய் வரை கடன் இருக்கிறது என்பது இதன் பொருள்.. அந்த நாட்டின் வருமானத்தை விடக் கடன் மிக அதிகமாக உள்ளது.  ஒப்பீட்டுக்காக இந்தியாவில் ஒரு மனிதன் 100 ரூபாய் சம்பாதித்தால் 56 ரூபாயும் தமிழகம் 26 ரூபாயும் கடனில் இருக்கிறது. அமெரிக்கா கிட்டத்தட்ட”திவாலாகும்” சூழல்.

டாலர் அரசியல் !இவ்வளவுக்கும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது பெரிய உற்பத்தியாளர். அவர்கள் துணிமணிகள் அல்லது சிறிய பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பதற்குப் பதில், அதிக லாபம் தரும் விமானங்கள் (Boeing), அதிநவீன இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பெரும் லாபம் ஈட்டுகிறார்கள்.

உலகிலேயே அதிக தங்கக் கையிருப்பு அமெரிக்காவிடம் தான் உள்ளது.  அவர்கள் தங்களது  தங்கத்தை ஏலத்திற்கு விட்டால்… உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சரிந்துவிடும் (Supply அதிகமாக இருப்பதால்). டாலர் மீதான மதிப்பு போய்விடும். அமெரிக்கா தங்கத்தை விற்காததற்கு இன்னொரு காரணம், அதை விற்றால் டாலர் காகிதமாகிவிடும் என்ற அச்சம்தான்.

அமெரிக்கா போன்ற ஒரு பெரிய நாடு பொருளாதார ரீதியாகச் வீழ்ந்தால், அதன் தாக்கம் உலகம் முழுவதும் நமக்கும் சேர்த்தே  பரவும்.  “Recession”. டாலர் மதிப்பு மாறும்போது, நாம் வெளிநாட்டிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெய் விலை உயரும். லாரி வாடகை ஏறும். தக்காளி முதல் பருப்பு வரை விலை கிடுகிடுவென உயரும். அதிக பணம் கொடுத்து குறைந்த பொருட்களை வாங்குவோம். மேலும் மென்பொருள் (IT) மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்காது. சம்பள உயர்வு இருக்காது.  செலவைக் குறைக்கத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கலாம்…etc

ஆனால், நமது பலம்  “நுகர்வு சார்ந்த பொருளாதாரம்” நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை நாமே பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நம்மிடம் மக்கள் தொகை உள்ளது. டாலரை அச்சிட்டு, உலக நாடுகளின் உண்மையான உழைப்பையும் பொருளையும் வாங்கின அமெரிக்கா இன்று  தள்ளாடுகிறது. தந்திரம் தோற்கும், தர்மம் வெல்லும்!

—  அம்மா சகாஸ்ரா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.