அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசியல் பேசுங்கள் ஆபாசத்தை அல்ல !

திறந்த மடல்-9

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களுக்கு, வணக்கம்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராக உயர்ந்தபோது அவர் ஆற்றிய உரையில்,“1967இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஏற்படுத்திய மகத்தான மாற்றத்தைத் தமிழக வெற்றிக் கழகம் 2026ஆம் ஆண்டு நிகழ்த்திக் காட்டும்” என்று , குறிப்பிட்டார்.  மக்கள் ஆதரவோடு அரசியல் கட்சிகள் எல்லா மாநிலங்களிலும் மகத்தான மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளன.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விஜய்அண்ணா கட்சி தொடங்கிய 6 ஆண்டுகள் கழித்தே 1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக பங்கேற்று 15 பேர் வெற்றி பெற்றனர். 1962 தேர்தலில் திமுகவின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது.  1965இல் காங்கிரஸ் கட்சி பள்ளிகளில் கொண்டு வந்த இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியப் பாதுகாப்பு படையாலும், காவல்துறையாலும் சுட்டு கொல்லப்பட்டார்கள். பல திமுக தொண்டர்கள் தங்களின் உயிரை விஷம் அருந்தியும், உடலுக்குத் தீ வைத்துக் கொண்டும் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டார்கள்.

அன்றைய மாணவர் கூட்டத்தின் தியாகம்தான் திமுக என்ற இயக்கம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராக மாணவர்கள் ஒன்று கூடி “அசாம் கணபரிஷத்” என்னும் அமைப்பைத் தொடங்கி 1979 முதல் 1985ஆம் ஆண்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த அமைப்பு 1895இல் நடைபெற்ற அம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டுப் போட்டியிட்டது.  126இல் 67 இடங்களில் வெற்றிபெற்ற அசாம் கணபரிஷத் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. அப்போது முதல்வராக அமர்ந்த பிரபுல்ல குமார் மகந்தாவின் வயது 30 என்பதை உங்களால் நம்பமுடியுமா? நம்பத்தான் வேண்டும். ஆட்சியைப் பிடித்த மகந்தா 2 ஆண்டுகளில் ஆட்சியை இழந்தார். காரணம் போராட்டங்களால் வளர்க்கப்பட்ட தங்கள் இயக்கத்தினரை மகந்தா அரசியல் மையப்படுத்தி வளர்க்கவில்லை. மகந்தாவிற்கும் ஆட்சியை நடத்தும் அறிவும் ஆற்றலும் பெற்றிருக்கவில்லை. இதுதான் இந்தியாவின் இளைஞர் வரலாற்றின் மகத்தான சாட்சியாகும்.

വിജയ്‌ക്കെതിരായ വിവാഹമോചന ഹര്‍ജിയിലെ വിവരങ്ങള്‍ പുറത്ത് | Actor Vijay's Wife Sangeetha Files for Divorce, Alleges Extramarital Affair with an Actress | Mathrubhumiபிப்ரவரி 27 தவெக தலைவர் விஜய் அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் மருத்துவர் சங்கீதா,  மணவிலக்கு என்னும் விவாக இரத்து வழங்கவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படி வழக்குத் தொடர்வதற்கு விஜய் அவர்களின் வாழ்க்கைத் துணைவியாருக்குச் சட்டம் இடம் அளிக்கின்றது. விஜய் கிறித்தவச் சமயம் சார்ந்தவர். கிறித்தவச் சமயம் ஒருதார மணத்தைத்தான் வலியுறுத்துகின்றது. மனைவி உயிரோடு இருக்கும்போது மணவிலக்கு பெறாமல் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வதோ, திருமண உறவை மீறி உறவில் இருப்பதும் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டப்படி குற்றமாகும். அதற்குச் சிறை தண்டனை வரை கிடைக்கச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விஜயிடமிருந்து மணவிலக்கு பெறுவது தொடர்பான சங்கீதாவின் வழக்கு தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொலி எங்கள் எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தவெக கட்சி சார்ந்த ஒரு பெண்,“விஜயண்ணாவிற்கு ஆயிரம் அக்கா, ஆயிரம் தங்கச்சிக்கா இருக்குறாங்க…. வேணும்னா நாங்க பொண்டாட்டியாவும் இருப்போம். உங்களுக்கு என்ன…” என்று பேசியுள்ளார். தமிழ்ப் பண்பாட்டின் உச்சமான உறவு அண்ணன்-தங்கை, அக்கா-தம்பி என்னும் உறவாகும். இந்த உயர்ந்த உறவைக் கொச்சைப்படுத்தும் விதமாகத் தவெக கட்சியின் உறுப்பினர் பேசியிருப்பது தமிழ்ப் பண்பாட்டைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தவெகவில் இருக்கும் உறுப்பினர்கள் தங்களை அரசியல் மையப்படுத்திக் கொண்டிருந்தால் இதுபோன்ற பண்பாட்டு சீர்குலைவான சிந்தனைப் பேச்சு எழுந்திருக்கும் வாய்ப்பே இருந்திருக்காது.

இனியும் காலம் கடந்துவிடவில்லை, தவெக உறுப்பினர்கள், தொண்டர்கள் அரசியல் படியுங்கள். அரசியல் பேசுங்கள். “நீங்கள் அரசியல் பேசவில்லை என்றால் உங்களுக்கு எதிரான, நீங்கள் விரும்பாத அரசியல்தான் உங்கள் தலையில் அமர்ந்துகொள்ளும்” என்னும் முதுமொழியை உணர்ந்து சமூகம் சார்ந்த அரசியல் பேசுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழன்புடன் : ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.