பட்டய கணக்காளர் தேர்வில் அசத்திய பி.பி.லோகப்பிரியா !

தணிக்கை (Auditing), வரி ஆலோசகர் (Taxation), நிதி மேலாண்மை, மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர்பதவிகளை பெறுவதற்கான பட்டயக் கணக்காளர் (CA) தேர்வை, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நடத்தி வருகிறது. Foundation, Intermediate, மற்றும் Final என மூன்று நிலைகளைக் கொண்டது. அகில இந்திய அளவில் ஆண்டுக்கு மூன்று முறை தேர்வு நடைபெறுகிறது.

2025 ஆம் ஆண்டிற்கான பட்டய கணக்காளர் முதல்நிலைத் தேர்வில் நாடு முழுவதும் 109694  பங்கேற்ற நிலையில், வெறும் 21,099 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதிலிருந்தே, இந்த தேர்வு மிகவும் சவால் நிறைந்த, கடினமான தேர்வுகளில் ஒன்று என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த பின்னணியில்தான், மதுரையைச் சேர்ந்த மாணவி பி.பி.லோகப்பிரியா, 400-க்கு 366 மதிப்பெண்கள் எடுத்து, அகில இந்திய அளவில் முதலிடத்தை தன் வசமாக்கியிருக்கிறார். தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அங்குசம் சார்பில் நாமும் வாழ்த்தி மகிழ்வோம்!

—   ஜெ.டி.ஆர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.