அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவதூறு அரசியல்? சாதனை அரசியல்? எது வேண்டும் உங்களுக்கு? கேள்வி எழுப்பும் கதிரவன் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவை  தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏ. கதிரவன் ஏப்ரல்-07 ஆம் தேதி மாலை திருத்தலையூர், டி புதுப்பட்டி, வெளியனூர், கரட்டாம்பட்டி,  மண்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.  அப்போது, பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் திரண்டு நின்று, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் .

கதிரவன்அப்போது எம்எல்ஏ கதிரவன் வாக்குகள் சேகரித்து  பேசுகையில், ”அந்த ஊராட்சி இந்த ஊராட்சி என்று எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் எனது சொந்த பணத்திலும் நிறைவேற்றி தந்துள்ளேன். அடித்தளம் உறுதியாக இருந்தால்தான் கட்டிடம் நீடித்து நிற்கும். அதற்கேற்ற வகையில் தமிழகத்தின் வருங்கால தூண்களான மாணவ மாணவிகளுக்கு சிறந்த கல்விக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளேன். பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்து கொடுத்துள்ளேன். எனது தொகுதியில் மேம்பாட்டு நிதியில் 60 சதவீதத்திற்கும் மேல் கல்விக்கும் குடிநீர் வசதிக்கும் தான் செலவழித்துள்ளேன். மக்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

Sowdambikaa Group Of Schools & Colleges In & Around ...

அந்த வகையில் எனது மக்கள் சேவையின் மீதும் தொகுதிக்கு ஆற்றியுள்ள நலத்திட்டங்களை கண்டும் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர் தரப்பினர் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதில் அதிமுகவினரை அடித்துக் கொள்ள எப்போதுமே யாரும் இல்லை. இதை எல்லாம் கண்டு நான் துன்பப்படப்போவதும் இல்லை. துவளப் போவதுமில்லை. எனது தொகுதி மக்களுக்கான சேவைப்பணி இன்றும் என்றும் தொடரும்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

கதிரவன்வெளியனூர், புதுப்பட்டி, திருத்தலையூர்,  கரட்டாம்பட்டி,  மண்பாறை ஊராட்சிகளில் சுமார் 35 கோடி ரூபாய்க்கு மேல் சாலை வசதிகள் குடிநீர் வசதிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள்,  நீர்நிலைகள் தூர்வாருதல், பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டிடங்கள், சமுதாயக்கூடம், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பணிகளை தரமாக செய்து கொடுத்துள்ளேன்.  உங்களுக்கான எனது பணி தொடர்ந்து நடைபெற உங்களில் ஒருவனான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் அளித்து பிரம்மாண்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்” என்பதாக பேசி கூட்டத்தினரின் பலத்த கரவொலிகளோடு பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

—        அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.