அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோட்டையை பிடிப்பாரா, நடிகர் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி சொல்வது என்ன ?

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இறுதிகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது. தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியை காட்டிலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி போட்டியிடும் எடப்பாடி தொகுதியை காட்டிலும் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் தொகுதியாக திருச்சி கிழக்கு தொகுதி அமைந்துவிட்டது. புதிய கட்சி தொடங்கிய சூட்டோடு தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம்தான் தற்போதைய தமிழகத்தின் பேசுபொருளாகவும் மாறியிருக்கிறது.

விஜய்முதல்முறையிலேயே, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், த.வெ.க. தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் சென்னை – பெரம்பூர், திருச்சி – கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருப்பதும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. ஒரு கட்சியின் தலைவராக, அவரது வெற்றியே உறுதி செய்யப்படாத நிலையில் இருப்பதைத்தான் இரண்டு இடங்களில் போட்டி என்ற முடிவிலிருந்து அறிய முடிகிறது என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சென்னை – பெரம்பூரை காட்டிலும், திருச்சி – கிழக்கு தொகுதிதான் நடிகர் விஜயின் முதல் இலக்காகவும் அமைந்திருக்கிறது. தனது சொந்த சாதியினர் நிறைந்த தொகுதி என்பதால், சொந்த ஜாதி ஓட்டுக்களை நம்பியே விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை தேர்வு செய்தார் என்றே சொல்கிறார்கள். மேலும், தேர்தலுக்கு முன்பாக இந்த தொகுதியில் மட்டும் சுமார் 60,000 பேரை த.வெ.க.வில் உறுப்பினராக்கியிருக்கிறார், விஜய். சொந்த ஜாதி ஓட்டு மற்றும் ரசிகர்களின் ஓட்டுக்களை மலையாக நம்பித்தான் அவர் இந்த தொகுதியில் களமிறங்கியிருக்கிறார், என்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், இதையெல்லாம் கணக்கில் வைத்துதான் அவர் முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தையும் திருச்சி – கிழக்கு தொகுதியிலிருந்து தொடங்கவும் செய்தார், விஜய்.

தவெக விஜய்திருச்சி விமான நிலையத்திலிருந்து, அவர் தெருமுனைக்கூட்டம் நடத்துவதற்காக அனுமதி பெற்றிருந்த காந்தி மார்க்கெட் மரக்கடையை வந்தடைவதற்கே ஆறு மணி நேரத்திற்கும் மேலான நேரத்தை எடுத்துக் கொள்வதாக அது அமைந்திருந்தது. ஆனாலும், அந்த மலிவான விளம்பர உத்தியை முன் அனுமானிக்கத் தவறியதன் விளைவாக கரூரில் பெருந்துயரையும் தமிழகம் எதிர்கொள்ள நேர்ந்தது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்த பின்னணியில், திருச்சி – கிழக்கு தொகுதியில் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவருக்கு எதிராக களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் பலம் – பலவீனம் என்ன என்பதை கழுகுப்பார்வையில் அலசியது அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

முதலில், தொகுதி எப்படி ?

2008 தொகுதி சீரமைப்புக்குப்பிறகு உருவான தொகுதி என்பதால், 2011, 2016, 2021 ஆகிய மூன்று தேர்தல்களை மட்டுமே இந்த தொகுதி எதிர்கொண்டிருக்கிறது. 2011 இல் தற்போதைய ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஆர்.மனோகரன், 2016 இல் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் அடுத்தடுத்து அதிமுக சார்பில் வென்ற தொகுதி. கடந்த 2021 இல், திமுக சார்பில் களமிறங்கிய முனைவர் இனிகோ இருதயராஜ் வசமான தொகுதி. சிட்டிங் எம்.எல்.ஏ. என்ற பலத்தோடு மீண்டும் அவரே களமிறக்கப்பட்டிருக்கிறார். அதிமுக சார்பில், தொழிலதிபர் ஜி.ராஜசேகரன் களத்தில் இருக்கிறார். நாம்தமிழர் கட்சி சார்பில் டாக்டர் வி.கிருஷ்ணசாமி உள்ளிட்டு 20 வேட்பாளர்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்கள்.

இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. திருச்சி கிழக்கு தொகுதி 
இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ.
திருச்சி கிழக்கு தொகுதி

பொதுவில், திமுக – அதிமுக ஆகியோருக்கிடையிலான இருமுனைப் போட்டிதான் தமிழகத்தில் நிலவுவதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ள நிலையில், த.வெ.க.வின் தலைவராகவும் நடிகராகவும் அரசியல் களத்தில் முதல்முறை களமிறங்கியிருப்பதால் நட்சத்திர வேட்பாளர் என்ற அந்தஸ்தோடு, அதிமுகவை பின்னுக்குத்தள்ளி திமுக – தவெக என்பதாகத்தான் போட்டி இருப்பதாகவே சொல்கிறார்கள்.

கல்வித்தகுதி :

திமுக வேட்பாளர் முனைவர் இனிகோ இருதயராஜ், எம்.ஏ. சோசியல் ஒர்க், டி.எல்.எல்., மற்றும் பி.எச்.டி. என்ற தகுதியோடு, டாக்டரேட் வேட்பாளராக முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்து அதிமுகவின் ஜி.ராஜசேகரன் பி.இ. மெக்கானிக்கல் படித்திருக்கிறார். நடிகர் விஜயின் கல்வித்தகுதியாக பி.எஸ்.சி. இடைநிறுத்தம் என்பதாகத்தான் பதிவு செய்திருக்கிறார். அதுவும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சக மாணவர்களோடு மாணவர்களாக இயல்பான பள்ளிச்சூழலில் கல்வி பயிலாமல் தனியராகவே தேர்ச்சி பெற்றிருப்பதாக பதிவு செய்திருக்கிறார்.

சொத்து மதிப்பு :

சொத்து மதிப்பில், த.வெ.க.வின் தலைவரும் நடிகருமான விஜய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். சுமார் 400 கோடிக்கு அதிகமான அசையும் சொத்துக்களையும், சுமார் 220 கோடிக்கும் அதிகமான அசையா சொத்துக்களையும் கொண்டிருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுகவின் இலால்குடி வேட்பாளர் லீமாரோஸூக்கு அடுத்த தமிழகத்தின் மிகப்பெரிய பணக்கார வேட்பாளர் என்ற இடத்தையும் பிடித்திருக்கிறார்.

விஜய் சொத்து
விஜய் சொத்து

அதிமுகவின் ராஜசேகரன் சுமார் 23 கோடிகளுக்கு அதிகமான அசையும் சொத்துக்களோடு; சுமார் 17 கோடிக்கு அதிகமான அசையா சொத்துக்களுடனும் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

திமுகவின் இனிகோ இருதயராஜ், 12 கோடிக்கு அதிகமான அசையும் சொத்துக்களையும்; சுமார் 16 கோடிக்கு அதிகமான அசையா சொத்துக்களுடன் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

தொழில் :

திமுகவின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ், கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் பிசினஸை பிரதானமாக கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார். அதிமுகவின் வேட்பாளர் ராஜசேகரன், திருச்சியில் பிரபலமான இந்திரா கணேசன் கல்வி குழுமங்களின் உரிமையாளர் என்று அறியப்படும் நிலையில், நிலவணிகம் மற்றும் விவசாயத்தைதான் பிரதான வருவாய் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிமுக ஜி.ராஜசேகரன்
அதிமுக ஜி.ராஜசேகரன்

இந்திரா கணேசன் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிரந்தர அறங்காவலர் என்பதாகவும் பதிவு செய்திருக்கிறார். த.வெ.க.வின் நடிகர் ஜோசப் விஜய், எந்த இடத்திலும் சினிமாவில் நடிகராக நடித்து அதன் வழியே சம்பாதிப்பதாக குறிப்பிடவில்லை. மாறாக, சுயதொழில் என்றும்; வட்டி மற்றும் சொத்துக்களின் வாடகையிலிருந்து கிடைக்கும் வருமானம்தான் வருவாய்க்கான ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் ஜெயாநகர் பிராப்பர்ட்டிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலான்மை இயக்குநராக ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரமாண பத்திரத்திரத்தில் குறிப்பிடுகிறார்.

அரசியல் அனுபவம் :

அரசியல் அனுபவத்தை பொறுத்தமட்டில், திமுகவின் இனிகோ இருதயராஜ் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஐந்தாண்டு கால அவரது சட்டமன்ற செயல்பாடுகளும் சரி, களப்பணிகளும் சரி தொகுதியில் நல்ல பெயரை எடுத்திருக்கிறார். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் படிப்பை விடாது முடித்து, தொழிலிலும் தடம் பதித்து வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்தவர் என்ற பின்புலத்தை கொண்டவராக இருக்கிறார். இளங்கலையில் அவர் படித்தது சமூக சேவை பாடப்பிரிவு. கல்லூரி காலத்திலிருந்தே, அவரது அரசியல் செயல்பாடும் இணையாகவே தொடங்கியும் விடுகிறது. நடுத்தர குடும்பத்திலிருந்து பிறந்ததால் மட்டுமல்ல; மக்களின் இன்ப துன்பங்களை அவர்களுடன் நெருங்கி பழகியதன் வழியே அறிந்தவராகவும் இருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் என்ற வரம்பையும் தாண்டி, தனிப்பட்ட முறையில் தனது தொகுதியை சேர்ந்த மக்களுக்கு அவர் பல்வேறு உதவிகளை செய்திருப்பதை தற்போது பலரும் நெகிழ்வோடு பகிர்ந்தும் வருகிறார்கள். வெறுமனே அடையாளத்துக்கான பண உதவியாக அவை எதுவுமில்லை. அவர்களின் வாழ்வாதாரத்துக்கான விதையாக அந்த உதவியை செய்திருப்பதால்தான், அதனால் பலன் பெற்றவர்கள் அவரை புளங்காகிதமடைந்து மெச்ச முடிகிறது.

விஜய்
விஜய்

த.வெ.க. நடிகர் விஜயை பொருத்தமட்டில், அரசியலுக்கு முற்றிலும் புதியவர். உடன் இருப்பவர்கள் உசுப்பேத்தி உசுப்பேத்தி, வடிவேலு பாணியில் நல்லா முறைச்சி பாருன்னே மத்ததை நாங்க பாத்துக்கிறோம் என்ற முறையில்தான் அவர் அரசியலில் களமிறக்கப்பட்டிருப்பதாகவே, அவரது நடவடிக்கைகளிலிருந்தே அறிய முடிகிறது.

கரூர் கொடுந்துயரை நேரில் கண்டும், காணாமல் விமானத்தில் பறந்து போனது தொடங்கி, மூன்று நாள் கழித்து செட்டப் வீடியோ வெளியிட்டது வரையில், கேரவேனை தொடர்ந்து வரும் தொண்டர்களை முறைப்படுத்த தவறியது, கேரவேனுக்குள் அமர்ந்தபடி, லைட்டை ஆன்-ஆஃப் செய்து ரசித்தது வரையில் எல்லாமே அரசியல் வரலாற்றில் கேரவன் அரசியல் என்றொரு புதிய உத்தியை புகுத்தியிருக்கிறார், நடிகர் விஜய். பள்ளிப் படிப்பைக்கூட மற்ற பசங்களோடு ஒன்றாக பழகி படித்திராத அடிப்படையிலிருந்துதான் இவையெல்லாம் வெளிப்படவும் செய்திருக்கிறது, என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள். மற்றபடி, மைக் பிடித்து பேசுவதெல்லாம், சினிமா ஷூட்டிங் டேக்குகளை போலவே, பெர்ஃபாமென்ஸில் பின்னி பிடலெடுக்கிறார், விஜய். அது தனிக்கதை!

அதிமுக ஜி.ராஜசேகரன்
அதிமுக ஜி.ராஜசேகரன்

அதிமுகவின் ராஜசேகரை பொருத்தமட்டில், கல்வி நிறுவனங்களின் அறங்காவலர், ரியல் எஸ்டேட் பிசினஸிலிருந்து நேரடி அரசியலுக்கு வந்திருப்பவர். இதுவரை கட்சியில் எந்த பொறுப்பையும், நேரடி மக்கள் தொடர்பையும் அறிந்திராதவர். பல்வேறு தொழில்களையும், கல்லூரி நிர்வாகத்தையும் திறம்பட நிர்வகிக்கும் நிர்வாகியாக தேர்ந்தவர் என்றாலும், மக்களோடு மக்களாக பழகிய அனுபவம் இல்லாதவர் என்றே சொல்கிறார்கள்.

மண்ணின் மைந்தன் யார் ?

திமுகவின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் இந்த விசயத்தில் முதலிடத்தை தக்க வைக்கிறார். எம்.எல்.ஏ. என்ற பந்தா இல்லாமல்,  ஒரு கவுன்சிலரை போல தொகுதியை பலமுறை வலம் வந்தவர். அவரது தொகுதியின் ஏறத்தாழ எல்லா தெருக்களும் அவருக்கு அத்துப்படி. இதுதான், வெளியூர் வேட்பாளர் என்ற விமர்சனத்திற்கு மத்தியிலும், வெறும் ஐந்தே ஆண்டுகளில் அவரது தொகுதி முழுவதிலும் அவரால் செல்வாக்கை செலுத்த முடிகிறது. தொகுதியில் அவருக்கென்று அமைந்திருக்கும் அலுவலகத்திற்கு சென்றால், அவரை நேரில் பார்த்து தங்களது குறைகளை சொல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. கூட்டணி கட்சியினர், கழக நிர்வாகிகளிடமும் அவரது கைப்பேசி எண் இருக்கிறது. எவர் ஒருவர் அழைத்தாலும் அழைப்பை ஏற்று பேசும் பக்குவத்தில் இருப்பது அவரது தனிச்சிறப்பாகவும் இருக்கிறது. பிழைப்புக்காக சென்னை குடிபெயர்ந்திருந்தாலும், அவர் பிறந்து வளர்ந்து படித்ததெல்லாம் திருச்சியில்தான் என்பதால், மண்ணின் மைந்தராக முதலிடத்தில் இருக்கிறார்.

இனிகோ இருதயராஜ்த.வெ.க. நடிகர் விஜயை பொருத்தமட்டில், பவுன்சர்கள், மெய்க்காவலர்கள் என பல படிநிலைகளை தாண்டித்தான் பார்க்கவே முடியும் என்ற எதார்த்தம் பெருந்தடையாக இருக்கிறது. ஒருவேளை, தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டால், திருவான்மியூரிலிருந்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடம் மாறி வந்துவிடுவாரா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகளாகவும் தொக்கி நிற்கிறது. தொலைபேசி வழியே, மாவட்ட செயலாளர் நினைத்தாலும் பேசிவிட முடியாது என்பது, மற்றொரு யதார்த்தம். இதற்கு மத்தியில்தான், இந்த தொகுதியில் ஜெயித்தால் மாதத்திற்கு ஒருமுறை தொகுதிக்கு வருவேன் என்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார், நடிகர் விஜய். ”இரவு 8 மணி வரையில் பிரச்சாரத்துக்கு அனுமதி இருக்கும் நிலையிலும்கூட, மாலை ஆறு மணிக்கு மேல் பிரச்சாரத்துக்கே வராத விஜய் மாதம் ஒருமுறை எப்படி வந்து செல்லப் போகிறார்?” என்ற கேள்வியும் தொகுதியில் நிலவுகிறது.

விஜய்திருச்சியை சேர்ந்தவர் என்றாலும், அதிமுகவின் ராஜசேகரனை பொறுத்தவரையில், மக்கள் தொடர்பில் எந்தவித முன்அனுபவம் இல்லாதவர். நிர்வாகியாகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் இருப்பவர்கள் அவர்களது தொழிலுக்கே உரிய விதத்தில் சில தலைமைப் பண்புகளை கையாள வேண்டியிருக்கும். அத்தகைய அதிகாரவர்க்கத்திற்கான தலைமைப்பண்புகளுடன் இதுநாள் வரை ஊறி வளர்ந்தவர், ஒரே தேர்தலில் எப்படி மக்களின் சேவகராக மாறிவிட முடியும் என்ற அர்த்தம் பொதிந்த கேள்வி அவருக்கு எதிராக இருக்கிறது.

நிறைவாக,

முனைவர் பட்டம் பெற்றவர், அரசியல் அனுபவம், பக்குவம், மக்களுடன் பழகும் விதம், சட்டமன்ற உறுப்பினராக கடந்த கால செயல்பாடுகள், மண்ணின் மைந்தர் என்ற அடையாளம் எல்லாமே திமுகவின் வேட்பாளர் இனிகோ இருதயராஜை முதலிடத்தில் இருத்தி வைத்திருக்கிறது. நட்சத்திர வேட்பாளராகிவிட்ட காரணத்தால், விஜய் மோகமும், ரசிக மனோபாவமும் நடிகர் விஜய்க்கு கணிசமான ஓட்டுகளை பெற்றுத்தருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. காசு இருந்தாலும், தேர்தல் களத்துக்கு புதிய முகம் என்பதால் இரண்டாம் இடத்துக்கே நடிகர் விஜயோடு இழுபறியாகும் நிலையில்தான் அதிமுகவின் வேட்பாளர் ராஜசேகரன் இருந்து வருகிறார்.

இத்தகைய களநிலைமைகளையெல்லாம் தாண்டி, த.வெ.க.வின் விசில் சத்தம் தமிழகத்தின் அரசியல் இரைச்சலாக காதை பிளக்கத்தான் செய்கிறது. திருச்சி – கிழக்கிலிருந்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பாரா? இல்லை, பிரச்சாரத்தை தொடங்கிய காந்திமார்க்கெட் – மரக்கடையிலேயே மண்ணைக்கவ்வுகிறாரா? என்பதெல்லாம் ஏப்ரல் 4-இல் தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

–              அங்குசம் அரசியல் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.