அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அம்மா சங்கமித்திரை …. அதிகம் கண்ணீர் வடிக்காதே !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

ஒரு மருத்துவரின் மகளாக உனக்கு தெரிந்ததுதான்; அதிகம் கிளிசரின் பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தாக முடியும்! உன் கண்ணீர் முழுவதும் கிளிசரின் கரைசல் என்று கண்டறிந்தவரும் ஒரு மருத்துவர்தான்; உனது தாத்தாதான் அவர்! உங்களது மோடி கூட்டணிக்கு எதிரான காங்கிரஸ் தோற்க வேண்டும் என்பதில் உனது உறுதி புல்லரிக்கச் செய்கிறது! அதுவும் ஜி கே எம் தமிழ்குமரன் தோல்வியை சூழுரையாக முழங்குகிறீர்கள்!

ஆனால் 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்கவேண்டும் என்பதற்காக, உங்கள் கட்சி வேட்பாளருக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யாமல், அவரை தோற்கடிக்கச் செய்து, காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்தீர்களே நினைவிருக்கிறதா?

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

கடலூர் மக்களவையின் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு எந்த உதவியும் செய்யாமல், உங்கள் அப்பாவின் மச்சானுக்கு –  விஷ்ணுபிரசாத்துக்கு, மறைமுகமாக நீங்கள் உதவி செய்து வெற்றியடைய வைத்தபோது, தங்கர்பச்சான் சிந்திய கண்ணீர் கிளிசரின் இல்லாத ஒரிஜினல் கண்ணீர்!

சங்கமித்ரா
சங்கமித்ரா

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

2026 June 11 - 17 Angusam Book

உனது தாய்மாமனும் தாத்தா கிருஷ்ணசாமியும் காங்கிரசில் கோலோச்சவேண்டும்; ஆனால் தமிழ்குமரன் காங்கிரசில் எம்எல்ஏ ஆகக்கூடாதா? ஒரு காலத்திலும் உறவுகள் அறுந்து போவதில்லை! நாளையே குழந்தையோடு தாத்தாவை பார்க்க போனால் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு!

நீங்கள் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் உங்கள்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் வன்னியர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறதே தெரிகிறதா? இனிமேலாவது பிற சமூகங்கள் மீதும் அன்பையும் பரிவையும் காட்ட கற்றுக்கொள்ளுங்கள்!

திராவிடம் ஏன் வெற்றி பெறுகிறதென்றால்…. உங்களைப் போலவே அவர்களும் ஓட்டு கேட்கும்போது அம்மா அப்பா பெரியப்பா சித்தப்பா சித்தி பெரியம்மா மாமா அத்தை அண்ணா அண்ணி அத்தாச்சி என்றுதான் ஓட்டு கேட்பார்கள்! ஆனால் அவர்கள் ஒருபோதும் இந்த உறவுகளை ஒரு சாதி சிமிழுக்குள் அடைத்ததில்லை! தமிழ் சாதிகள் எல்லோருக்கும் கலைஞர் தாத்தாதான் ஸ்டாலின் அப்பாதான்!

—   காவேரிநாடன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.