வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெறுவது எப்படி?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வேட்பாளர்களின் பெயர்களை வரிசைப்படுத்துவதற்கும் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படித்தான் பெயர்கள் அச்சிடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்படுகிறது.

முதலில், மத்திய மற்றும் மாநில கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் இடம்பெறும். அடுத்து, அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்கள் அடுத்து இடம்பெறும்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் இறுதியாக இடம்பெறும். கடைசியாக நோட்டாவுக்கு இடம் கிடைக்கும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவ்வாறு வேட்பாளர்களின் பெயர்கள் பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவில் உள்ள பெயர்களும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படுகிறது. இதில், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை அமைகிறது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பெயர்கள் இடம்பெறும். அதற்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரம் இணைக்கப்படும். இவ்வாறு அதிகபட்சமாக 24 இயந்திரங்கள் வரை இணைக்க முடியுமாம்.

தற்போது நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் தான் அதிகபட்சமாக ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. இங்கு 80 வேட்பாளர்கள் உள்ளன.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.