அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கோச்சிங் செண்டர் கொள்ளையர்களை தோலுரிக்கும் ‘எக்ஸாம்’-வெப் சீரிஸ்!

திருச்சியில் அடகு நகையை விற்க

நீட், ஐஏஎஸ் தேர்வுகள் உட்பட பல போட்டித் தேர்வுகளுக்கு கோச்சிங் செண்டர் நடத்தும் பல கிரிமினல்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆசையைத் தூண்டி பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகளாக பெருத்துவருகின்றனர். அப்படிப்பட்ட கொள்ளையர்களை தோலுரிக்கும் ‘எக்ஸாம்’ என்ற வெப் சீரிஸ், வருகிற 15—ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகிறது. ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸின் கதையை ஏ.சற்குணம் எழுதி டைரக்ட் பண்ணுகிறார். இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரியின் ‘வால்வாட்சர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது.

சீரிஸின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடந்தது. இதில் பேசியவர்கள்…

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

புஷ்கர், “எங்களது முதல் படமான ‘குவாட்டர்-கட்டிங்’ ஆரம்பிக்கும் முன்பே சற்குணத்தின் களவாணி படம் ரிலீசாகி செம ஹிட்டானது. அதனால் கதை தான் முக்கியம் என்பது எங்களுக்குப் புரிந்தது. இந்த சீரிஸின் கதையை சற்குணம் சொன்னதுமே திறமையான கலைஞர்களும் நல்ல நடிகர்களும் இருந்தால் போதும் என முடிவு செய்து, துஷாரா விஜயனையும் அதிதி பாலனையும் புக் செய்தோம். சினிமாவுக்கும் வெப் சீரிஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இந்த சீரிஸின் ஒவ்வொரு எபிசோடும் த்ரில்லிங்கா இருக்கும்”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

காயத்ரி, “வேறு ஒருவரின் கதையை நாங்கள் எடுப்பது இதான் முதல்முறை. சற்குணம் மீது எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை. இதில் மரமல்லி என்ற டிஎஸ்பியாக நடிக்க அதிதி பாலன் ஸ்பெஷல் டிரெய்னிங் எடுத்தார். அவர்பட்ட கஷ்டத்திற்கு நல்ல பலன் கிடைக்கும். அதே போல் தான் துஷாராவும். ஜான்ஸியாகவே தூள் கிளப்பியிருக்கார் துஷாரா. இதில் பணிபுரிந்த கேமராமேனுக்கும் ஆர்ட் டைரக்டருக்கும் இதான் முதல் அனுபவம். எல்லாமே சிறப்பா வந்திருக்கு”.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

துஷாராவும் அதிதி பாலனும் பேசும் போது இந்தக் கதையில் இந்த கேரக்டர்களுக்கு தங்களை செலக்ட் பண்ணிய  காயத்ரிக்கு நன்றி சொன்னார்கள்.

டைரக்டர் ஏ.சற்குணம், “சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடாமியின் சங்கர் எனக்கு நெருங்கிய நண்பர். போட்டித் தேர்வுகளுக்காக நடக்கும் முறைகேடுகளை நீதிமன்றத்தின் மூலம் நாடறியச் செய்தவர். அவர் சொன்ன தகவல்கள் மற்றும் சில நண்பர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் இந்தக் கதையை எழுதி புஷ்கர்-காயத்ரியிடம் சொன்னேன். நாம் நல்ல விஷயத்தைச் சொல்லப் போகிறோம். அதனால் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற எதிர்பார்ப்பை ஏழு எபிசோடுகளும் கொடுக்க வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதே போல் தான் நானும் எழுதியிருக்கேன். நடுத்தர மக்களின் மிகப்பெரிய கனவு தான் போட்டித் தேர்வு. அதில் கொள்ளையர்களின் கைவரிசையை அம்பலப்படுத்தியிருக்கோம். இதில் எனக்கு ஆதரவாக இருந்த அமேசான் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் நன்றி”.

—     ஆண்டவர்

 

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.