அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள்…!

திருச்சியில் அடகு நகையை விற்க

ஆதாய கொலை வழக்கில் 48 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

கரூர் மாவட்டம், கரூர் நகர உட்கோட்டம், வெள்ளியணை காவல் நிலைய குற்ற எண் 122/26 u/s 127(2) , 103(1) , 305 BNS  ஆதாயக் கொலையுண்ட வழக்கில் எதிரிகளை விரைவாக கண்டறிந்து பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு அருகிலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு CCTV கேமிராக்களை ஆய்வு செய்தும், சமீபத்தில் சிறையில் இருந்து வெளிவந்த குற்றவாளிகளையும்,  சந்தேக நபர்களையும் விசாரணை செய்யப்பட்டது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மேற்குறிப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான  1) பார்த்தீபன், வயது 24, த/பெ சுப்பையா, திருநெல்வேலி மாவட்டம்,  2) பாண்டீஸ்வரன் (எ) பாண்டி, வயது 19, த/பெ மனோகரன், மதுரை,  3) வனிதா, வயது 23, த/பெ சண்முகம், கரூர் மாவட்டம் 4) கொம்பையா, 24/26, தஃபெ.முருகன், திருநெல்வேலி. 5) சதீஸ்குமார், 26/26, த/பெ.சுப்பையா, திருநெல்வேலி. ஆகியோர்களை குற்றம் நடந்த 48 மணிநேரத்திற்குள் அடையாளம் கண்டறியப்பட்டது.

மேற்கூறிப்பிடப்பட்ட வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N.ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப. அவர்கள் நேரில் அழைத்து வழக்கின் தன்மை மற்றும் குற்றவாளிகளின் நிலைகளை கேட்டறிந்து சிறப்பாக செயல்பட்டதற்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.