அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.

Flats in Trichy for Sale

திருச்சி மாவட்டம், மாராடியைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவரின் மகன் சக்திவேல் (30) .இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வருகிறார். மேற்படி தோட்டத்தில் உள்ள ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக உப்பிலியபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் உப்பிலியபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் போலீஸார் அங்கு சென்று சக்திவேலை கைது செய்து , அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி , வெடிமருந்து 100 கிராம் மற்றும் 30 பால்ரஸ் குண்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர் . மேலும் சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.