மதுரை மத்திய சிறையில் கஞ்சா, குட்கா, சிம்கார்டு பதுக்கல் காவல்துறையினர் சோதனை 

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரை மத்திய சிறையில் கஞ்சா, குட்கா, சிம்கார்டு பதுக்கல் காவல்துறையினர் சோதனை 

Flats in Trichy for Sale

மதுரை மத்திய சிறைச்சாலையில் தோட்டவேலை பணியில் ஈடுபட்ட  சிறைவாசி ஒருவர் சிறைவாசிகளுக்கு கஞ்சா, குட்கா, சிம்கார்டுகள் கஞ்சாபொட்டலங்களை வெளிநபர்களிடம் வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர் இச்சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மத்திய சிறை வளாகத்தில் விதிகளை மீறி தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் , புகையிலை, சிகரெட், செல்போன் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மதுரை மாநகர் காவல்துறைக்கு உட்பட்ட 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 100 காவலர்கள் கொண்ட காவல்துறை குழுவினர் காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை தொடர்ச்சியாக 4 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்மதுரை மத்திய சிறையில் உள்ள பெண் சிறைவாசிகள் பிரிவு உட்பட 1300க்கும் மேற்பட்ட கைதிகளின் அறைகள் மற்றும் வளாகங்கள் உணவு தயாரிக்கும் பகுதிகளில், கைதிகள் மற்றும் சிறை அலுவா்கள் பயன்படுத்தப்படும் அறைகள் , உணவுக்கூடங்கள், கழிவறைகள், தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்மகளிர் சிறையில் மகளிர் காவல்துறையினர் தனிதனியே சோதனையில் ஈடுபட்டனர்மதுரை மத்திய சிறையில் திடீரென நடைபெற்ற சோதனையால் சிறை வளாகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டதுஇதனையடுத்து 4 மணி நேர சோதனைக்கு பின்னர் காவல்துறையினர் புறப்பட்டு சென்றனர்சோதனையில் போதைப்பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட ஏதேனும் பொருட்கள் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து சிறை நிர்வாகத்தின் சார்பில் தகவல் வெளியாக வாய்ப்புள்ளது

Sri Kumaran Mini HAll Trichy

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.