திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் இலக்கிய விழா – சிறுகதை நூல் வெளியீடு
திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் இலக்கிய விழா – சிறுகதை நூல் வெளியீடு
திருச்சி பாரத மிகுமின் நிறுவனக் குடியிருப்பில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஏகரசி தினேஷ் அவர்கள் எழுதிய ‘இடர் களையாய்’ என்னும் சிறுகதை தொகுப்பு நூலாக (28.12.2022) வெளியிடப்பட்டது. இந் நிகழ்வுக்குத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி மேனாள் தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைமை தாங்கி சிறுகதை தொகுப்பு நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
நூலின் முதல் படியைத் தேனித் தமிழ்ச்சங்கத் தலைவரும், முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியருமான தேனி மு.சுப்பிரமணி பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.இந் நிகழ்ச்சிக்கு முன்னிலைப் பொறுப்பேற்றிருந்த பெல் சாரதா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி பா. சுமதி அவர்கள் மற்றும் பாரத மிகுமின் நிறுவனத்தில் பணியாற்றும் பௌத்தம் போற்றும் செல்வன் சாக்யா ஆகியோர் திறனாய்வுரை வழங்கினர். விழாவில் பெரி.பாலசுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் ஏகரசி தினேஷ் நன்றி கூறினார்.