மதுரையில் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
மதுரையில் ஊராட்சி மன்ற தலைவரை தகுதி நீக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
முறைகேட்டிற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பெண் துணைத் தலைவருக்கு மிரட்டல் விடுப்பதாக குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையபட்டி கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் பாக்கியம்
இந்நிலையில் இவரது கணவர் வீரணபாண்டி என்பவர் ஊராட்சி மன்ற நிர்வாக செயல்பாடுகளில் தலையிட்டுவருவதோடு100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அரசு ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்வதாகவும் அதற்கு துணை போக கூறி பெண் துணை தலைவரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறி இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வலையபட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட 5வார்டு உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்மேலும் அரசு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பொதுமக்களுக்கான சேவைகளுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிகளை செய்து வருவதாகவும் ஏற்கனவே பலமுறை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் புகார் அளித்தும் கூட கண்டுகொள்ளாத நிலையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
வலையபட்டி ஊராட்சிமன்ற தலைவர் தனது கணவர் மூலமாக பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிர்வாகத்தில் தலையீடு ஆகிய காரணங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே ஊராட்சி மன்ற தலைவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்ஊராட்சி கூட்டத்தின் போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் கலந்துகொண்டு வார்டு உறுப்பினர்களை மிரட்டும் வகையில் பேசுவது அலுவலகத்தில் தேசியகொடி ஏற்றுவது, அரசு திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் பேசுவது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக கூறி அதற்கான வீடியோக்களையும் புகாராக மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்ஊராட்சித் தலைவருடைய கணவர் தங்களை மிரட்டுவதாகவும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யாமலே அவர்களுக்கு ஊதியம் ஏற்றி ஒவ்வொரு அட்டைகளுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாங்கிக் கொள்வதாகவும் அரசு ஒப்பந்த பணிகளை தரமற்ற ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் துணைத்தலைவரை மிரட்டிவருவதோடு
இது பல முறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சி தலைவர் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் 5 பேரும் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்