ஒரு பி.ஆர்.ஓ. தயாரிப்பாளரானார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஒரு பி.ஆர்.ஓ. தயாரிப்பாளரானார்! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணைத் தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).

கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸாக விருக்கும் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் & பிரஸ்மீட் சென்னையில் ஆக.28- ஆம் தேதி மாலை நடந்தது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இந்நிகழ்வினில் பேசியவர்கள்… தயாரிப்பாளர் பிஜிஎஸ், – “இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருக்கும் . படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர். கதையை நம்பி ஒப்புக் கொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி. இயக்குனர் பிரசாத் சார் என்னிடம் சொன்ன கதையை அப்படியே அற்புதமாக எடுத்துருக்கார்‌ படம் அருமையாக வந்துள்ளது. பரத் சாருக்கு மிகவும் நன்றி. ஒட்டு மொத்த குழுவும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்”.

Once Upon A TIme In Madras -
Once Upon A TIme In Madras –

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

இணை தயாரிப்பாளர் ஹாரூன், – இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னதுடன் அதை விட அட்டகாசமாக எடுத்துள்ளார். இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். படம் நிச்சயமாக உங்களை சிந்திக்க வைக்கும்”.

ஒளிப்பதிவாளர் கண்ணன் – படத்தின் தயாரிப்பாளர்களை அதிகமாக கஷ்டப்படுத்திருக்கேன். நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர். படம் நன்றாக வந்துள்ளது. பட்டியல் படம் போல, இந்தப் படமும் பரத்துக்கு பெரிய படமாக இருக்கும். நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காக தான். படம் சிறப்பாக வந்துள்ளது”.

நடிகை மிருதலா சுரேஷ், – “எனக்கு இதுதான் முதல் படம் இந்தப் படம் கிடைத்தது வரம். பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். உங்கள் ஆதரவை கொடுங்கள்”.

நடிகை சினிசிவராஜ் – “முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன். பரத் சார் எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார். இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்து பொறுமையாக என்னிடம் வேலை வாங்கினார். உங்கள் ஆதரவை இந்தப் படத்திற்கு கொடுங்கள்”.

இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் –“தயாரிப்பாளர் ஆனந்த் அண்ணனுக்கு மிகவும் நன்றி. என்னை அவர்தான் தேர்வு செய்தார். த்ரில்லர் சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைப்பது இதான் முதல் தடவை. படம் சிறப்பாக வந்துள்ளது, மொத்த குழுவிற்கும் நன்றி”.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த்… –“இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

Once Upon A TIme In Madras -
Once Upon A TIme In Madras –

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

நடிகை பவித்ரா லக்ஷ்மி, –“இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது. ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள். இயக்குநருக்கு வாழ்த்துகள். ஒட்டு மொத்த குழுவிற்கும், பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்”.

நடிகர் ஷான், –“இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர். பரத் சாருக்கும் மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி”.

இயக்குநர் பிரசாத் முருகன் –“இந்தக் கதையைக் கேட்டதிலிருந்து இப்போது வரை என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தயாரிப்பாளர் ஆனந்த்துக்கு மிகவும் நன்றி. அதேபோல் பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள். என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்கள் . இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம். அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் “.

நடிகை அபிராமி, “இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன். எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது. ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது. இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும்போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார். படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும்”.

ஹீரோ பரத் –  “இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன், கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது. அதே போல தான் இந்தப் படமும் இருக்கும். எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம் .நான் மொத்த கதையையும் கேட்கவில்லை. டைரக்டர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது.

Once Upon A TIme In Madras -
Once Upon A TIme In Madras –

அதனால் இந்த படத்தில் நடித்தேன். அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். படத்தைப் பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள்” கேப்டன் டிவியின் பி.ஆர்.ஓ.வாகவும் பல தமிழ் சினிமாக்களுக்கு பி.ஆர்.ஓ.வாகவும் பணிபுரிந்த எம்.பி.ஆனந்த் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார். இப்பபடத்தில் கனிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘நெடுநல்வாடை’ படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார். படத்தின் வசனம்& பாடல்களைஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.

காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ராட்சசன்’ படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார். கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார். படத்தின் சண்டைக்காட்சிகளை சுகன் அமைத்துள்ளார். காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.

படத்தின் லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன்சங்கர் எக்ஸ்கியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார்
தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.