பட்டியல் சாதி பெண்ணின் காதல் மறுப்பு ? இஸ்லாமிய காதலன் ஆணவக் கொலை !
பட்டியல் சாதி பெண்ணின் காதல் மறுப்பு ? இஸ்லாமிய காதலன் ஆணவக் கொலை ! தர்மபுரி வி.ஜெட்டிஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஜாவித் மகன் முகமது ஆசிப் (25). இவர் டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ளார். திருமணமாகாதவர்.
கடந்த இரு வாரத்திற்கு முன்பு, இலக்கியம்பட்டியில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பிரபலமான பிரியாணி கடையில், வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்தார்.நேற்று (27.07.2024 ) இரவு, கடையில் உள்ள ஜூஸ் பிரிவில் அவர் பணியாற்றி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென கடைக்குள் புகுந்த 4 பேர் கும்பல், முகமது ஆசிப்பை கத்தியால் சரமாரியாக குத்தினர். அவர்களிடம் இருந்து தப்பி வெளியே ஓடிச்செல்ல முயன்ற போது, படிக்கட்டில் தவறி விழுந்தார். பின்னர் அந்த கும்பல், அவரை கத்தியால் குத்தியும், ராடால் சரமாரியாக தாக்கியும் அங்கிருந்து தப்பியது. , இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முகமது ஆசிப்பை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து நம்முடைய விசாரனையில்..
சேலம் மாவட்டம் ஓமலூர் செட்டிப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த டாக்டர் சீதா மற்றும் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் முகமது ஆசிக் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையேயான காதலை ஒப்புகொள்ளாத பெண் வீட்டார், பட்டியல் சாதியிலயே வேறு பையனை பார்த்து நிச்சயம் செய்து பத்திரிக்கையும் அடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் திருமணத்திற்கு உயிரே போனாலும் சம்மதிக்க மாட்டேன் என காதலி மறுக்கவே , அவன் உயிரோடு இருப்பதால் தானே கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என கூறி பெண்ணின் அண்ணன்களான, ஜனரஞ்சன் , ஜன ஹம்சப்ரியன் , தன் நண்பர்களுடன் சேர்ந்து.. தர்மபுரியில் தொப்பி வாப்பா பிரியாணி கடையில் புகுந்து காதலன் முகமது ஆசிக்கை வெட்டி கொலை செய்துள்ளனர். தன் சகோதரியின் காதலுக்கு வீட்டில் தடையாக இருந்தது வசதி வாய்ப்பற்ற “முகமது ஆசிப் ” என்பதே காரணம் என கூறுகின்றனர்.
இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். கடையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று ஆய்வு நடத்தினர். மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு, விசாரணை நடத்தப்பட்டதில் , அதில் மூன்று பேர் பிரியாணி சாப்பிடுவதற்காக, வாடிக்கையாளர் போல் கடைக்குள் வருகின்றனர். அப்போது முகமது ஆசிப் செல்போனில் பேசிக் கொண்டுள்ளார்.
ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, முகமது ஆசிப்பின் இடுப்பில் குத்துகிறார். இதில் அதிர்ச்சியடைந்த அவர், தப்பியோட முயல்வதும், சுற்றிவளைத்த 4 பேர் கும்பல் சரமாரியாக குத்தியும், இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த காட்சிகள் பதிவாகி உள்ளது . இதனடிப்படையில் ஒருவரை கைது செய்து உள்ளோம் . தலைமறைவாக குற்றவாளிகளை தனிப்படை அமைத்து தேடிவருகிறோம் என்றார். தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் கொலை சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க நான்கு தனிப்படைகளை அமைத்து உத்திரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் மேற்பார்வையில் தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் வேலுத்தேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் சேலம் மாவட்டம் ஓமலூர் சென்று கொலையாளிகள் மூன்று பேரையும் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் அதிகாலை சிவாடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவரையும் மொத்தம் நான்கு பேரையும் கைது செய்து அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் கொலையாளிகள் ஜனரஞ்சன் மற்றும் ஜன அம்ச பிரியன் ஆகிய இருவரின் சகோதரியை முகமது ஆசிப் காதலித்ததால் தான் ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் தொடர்ந்து கொலையாளிகள் நான்கு பேரிடமும் அவர்களுக்கு வேறு ஏதும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கா மணிகண்டன்