அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு : லட்சுமி கிரியேஷன்ஸ் இசக்கி கார் வண்ணன், இயக்குநர்: தி.கிட்டு, திரைக்கதை: திருமுருகன், நடிகர் –நடிகைகள்: இசக்கி கார் வண்ணன், அபி நட்சத்திரா, பிரவீன் பழனிசாமி, காதல் சுகுமார், செளந்தர், செல்வகுமார் குப்புசாமி, கரண் சக்ரவர்த்தி, சித்து குமரேசன், குயிலி நாச்சியார், உதயா சுமதி, நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா, ஒளிப்பதிவு: சிபி சதாசிவம், எடிட்டிங்: இளங்கோவன், இசை: தீஷன், ஆர்ட் டைரக்டர்: முஜிபுர் ரஹ்மான், பிஆர்ஓ: ஆ.ஜான்.

1970- ல் கதை நடக்கிறது. மதுரையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் அமைதி ராஜ்.( இசக்கி கார் வண்ணன்) பெண்களை வன்புணர்வு செய்த மனித மிருகங்களை வரிசையாக என்கவுண்டரில் போட்டுத் தள்ளுகிறார். இதனால் விசாரணைக்குள்ளாகும் அமைதி ராஜுக்கு பனிஷ்மெண்டாக, மதுரை அருகே உள்ள மலை கிராமமான செங்காடு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுகிறார் மதுரை கமிஷனர். பாழடைந்த அந்த ஸ்டேஷனில் இரண்டு கான்ஸ்டபிள்கள் மட்டுமே இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த ஸ்டேஷனில் எந்த வழக்கும் பதிவாகாதது அமைதி ராஜுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தினமும் இரண்டு கேஸ்களை கொண்டு வந்தே ஆகவேண்டும் என கான்ஸ்டபிள்களுக்கு உத்தரவு போடுகிறார் அமைதி ராஜ். இவரும் அந்த மலை கிராமத்தை ரவுண்டு வருகிறார். இந்த நிலையில் தான் அந்த கிராமத்திற்கு வந்த வாத்தியார் செல்வம் ( பிரவீன் பழனிசாமி) கொலை செய்யப்படுகிறார். இந்த கேஸை விசாரிக்க களம் இறங்கிய பிறகு தான் அமைதி ராஜுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. அதற்கு க்ளைமாக்ஸில் கிடைக்கும் விடை தான் இந்த ‘ஆட்டி’. இன்ஸ்பெக்டராக இசக்கி கார் வண்ணன் கொஞ்சம் மிடுக்கு, கொஞ்சம் கறார்த்தன்மை, கொலையை விசாரிக்கும் பாங்கு என தன்னால் முடிந்த வரை கேரக்டரில் டெம்போ ஏற்றுகிறார். அந்த ஊர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்கும் உள்ளூர்ப் பெண்ணாக அபிநட்சத்திரா. அங்கே இருக்கும் எஸ்டேட் ஓனர் பங்களாவுக்கு போகிறார். வருகிறார். அவர் ஏன் போனார் என்பதற்கு சரியான காரணம் இடைவேளைக்கு பிறகு தான் தெரிகிறது. முகம் முதல் உடல் முழுவதும் வெள்ளை ஆடை அணிந்து சிலரை போட்டுத் தள்ளும் ஐந்து மர்ம நபர்கள் பெண்களே என்பதை வலுவான காரணத்துடன் க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார் டைரக்டர் கிட்டு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஆனால் அதற்கு முன்பான ஒரு மணி நேரம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. ஆராய்ச்சி மாணவி சித்து குமரேசனின் கேரக்டர் பெயர் காளியம்மாள். சீமானின் சிஷ்யனான இசக்கி கார் வண்ணன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெயரை வைத்து படத்தை ஆரம்பித்திருப்பார்னு நினைக்கிறோம். ஏன்னா சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே அப்ப உரசல் ஆரம்பிக்கல. எப்போதும் ஸ்டேஷனில் தூங்கிக் கொண்டிருக்கும் கான்ஸ்டபிள் காதல் சுகுமார் கேரக்டர் பெயர் விடியல். இந்த மாதிரி கேணச் சேட்டைகளை நிறைய பார்த்துட்டோம் சீமானின் சிஷ்யனே… “எங்கள் குலத்தில் பெண்கள் முதலாம்” இந்த ஒன்றுக்காகவும் வீரத் தமிழச்சிகளின் வரலாற்றை சொன்னதற்காகவும் சீமான் சிஷ்யனை மன்னித்து தொலையலாம். ஆட்டி இரண்டாம் பாகத்தில் என்னத்த ஆட்டப் போறானு பார்ப்போம் . வந்தா பார்ப்போம் .

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் பார்வையில் ‘ஆட்டி’ 40/100

— ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.