அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மாணவர்களை பார்த்து ஏன் எல்லோரும் பயப்படுறாங்க? – டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி நேஷனல் கல்லூரியில், வணிகவியல்துறையின் சார்பில் ஜூலை-30 அன்று நடைபெற்ற COMMERCIA – 2K26 விழாவில் சிறப்பு விருந்தினராக, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

வழக்கமான அறிவுரை வழங்கும் பாணியில் உபதேசிக்கும் வகையில் அல்லாமல், மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி கலகலப்பான கலந்துரையாடலாக அமைந்திருந்தது அவரது உரை.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

”இன்று நீங்கள் எதையெல்லாம் கொண்டாட்டம் என்று நினைக்கின்றீர்களோ? எது ஹேப்பினஸ் என்று கருதுகிறீர்களோ? அதெல்லாம் உண்மையில் கொண்டாட்டம்தானா? மனமகிழ்வை தருபவைதானா?” என்பதாக கேள்வியெழுப்பியவர், இன்று மாணவர்களை பார்த்து ஆசிரியர்களும் சமூகமும் அச்சப்படும் நிலை இருக்கிறது. சமூகத்துக்குப் பொறுப்பானவர்களாக மாணவர்கள் ஏன் மாற வேண்டும்? எப்படி மாறவேண்டும் என்பதை எடுத்துரைத்தார்.

”படிச்சு முடிச்சு பார்த்துக்கலாம்” என்றில்லாமல், இப்போதிலிருந்தே எதிர்காலத்திற்கான திட்டமிடலை எவ்வாறு ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களோடு விளக்கியவர்;  வரைமுறையற்ற கைப்பேசியின் பயன்பாடு எப்படிபட்ட மனநிலையை மாணவர்களிடத்தில் தோற்றுவிக்கிறது என்பதை எடுத்துரைத்தார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தலையணையின் கீழ் கைப்பேசியை வைத்துக்கொண்டு தூங்கும் பழக்கத்தை கைவிட்டு; அதற்குப்பதிலாக, தினமும் டைரி எழுதும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

சுவாரஸ்யமான அவரது முழுமையான உரையை காண 

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.