அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஜனநாயகனுக்கு டஃப் கொடுக்கும் ‘அனலி’ !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘சிந்தியா புரொடக்‌ஷன் ஹவுஸ்’ பேனரில், சிந்தியா லூர்டே தயாரித்து ஆக்ஷன் ஹீரோயினாக நடித்து 2026 ஜனவரி 02-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது ‘அனலி’. அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ளார் .  ‘அனலி’ யின்  டிரைலர் வெளியீட்டு விழாவும் அதன் பின் ஹீரோயின் சிந்தியாவின் அதிரடி பேட்டி யும் சென்னை லீ மேஜிக் லேண்டன் பிரிவியூ தியேட்டரில் நடந்தது. இதோ சிந்தியா லூர்டே பேசுகிறார்.

“வர்ணாஷ்ரமம், ‘தினசரி’  படங்களுக்கு பிறகு ‘அனலி’ என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன்.

சிந்தியா லூர்டே
சிந்தியா லூர்டே

யாவரும் கேளீர்

இந்த படத்தில் நிறைய வில்லன்கள் இருக்கிறார்கள். பி.வாசு சார் மகன் சக்தி வாசு தான் இந்த படத்தின் மெயின் வில்லன். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்படம் மூலம் ரீ-எண்ட்ரி ஆகிறார். பிரபல பாலிவுட் நடிகர் கபிர் துஹான் சிங் இன்னொரு வில்லனாக நடித்திருக்கிறார். மலையாள நடிகர் அபிஷேக் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளங்கோ குமரவேல், இனியா,  ஜெயசூர்யா, மேத்யூ வர்கீஸ், அசோக் பாண்டியன், ஜென்சன் திவாகர், வினோத் சாகர், பேபி ஷிமாலி, சிவா என பல பிரபல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் தினேஷ் தீனா சொன்ன கதை ஒரு நல்ல அழகான கதை. கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக் செல்லும், இறுதிக் காட்சி வரை உங்களை அமர வைக்கும். சினிமாவில் எந்த பின்புலமும் இன்றி வந்து சாதிப்பது கஷ்டம். ஒரு தயாரிப்பாளராக நான் நேர்மையாக இருக்கிறேன். எல்லோருக்கும் பேசியபடி  சம்பளத்தை தந்திருக்கிறேன். ஷூட்டிங்கிலும் தினசரி பேட்டா முதற்கொண்டு அன்றைக்கே தந்திருக்கிறேன். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன், எவ்வளவு சம்பளம் கேட்டாலும் தருவேன் என நினைத்தார்கள். ஆனால் தயாரிப்பாளராக நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். அந்த விஷயத்துல நான் பக்கா லோக்கல். படத்தை  ரெட் ஜெயண்ட் மூவீஸ்  தமிழகம் முழுக்க வெளியிடுகிறது.  ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆனாலும் என்னுடைய படமும் நிச்சயம் பொங்கல் சீசனிலும் தியேட்டர்களில் ஓடும்” என்றார்.

*தொழில் நுட்பக் குழு:*

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

சண்டைப்பயிற்சி : ‘கலை மாமணி’ சூப்பர் சுப்பராயன்

ஒளிப்பதிவு : ராமலிங்கம்

இசை: DC  (தீபன் சக்கரவர்த்தி)

கலை இயக்குனர் :தாமு

எடிட்டிங் : ஜெகன் சக்கரவர்த்தி

நடனம் : விக்னேஷ், பி.ஆர்.ஓ.: ஷேக்

—   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.