அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இருசக்கர வாகனத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வினோதமான முறையில் இருசக்கர வாகனத்தில் சென்று தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மக்களுடன் ஒருவராகப் பிரச்சாரம்:

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

தொடர்ந்து மூன்றாவது முறையாக இத்தொகுதியில் களம் காணும் அவர், திருவெறும்பூர், பகவதிபுரம், பிரகாஷ் நகர், மலைக்கோவில் மாதா கோயில் தெரு ஒன்றிய தெரு கூத்தைப் பார் பேரூருக்கு உட்பட்ட திடீர் நகர்  உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

குறிப்பாக இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாகச் சென்று இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். அரசுப் பேருந்துகளில் ஏறிப் பயணிகளிடம் கலந்துரையாடி ஆதரவு திரட்டினார்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் வட்டக் கழகச் செயலாளர்கள் சோமகுணாநிதி   அருண் பேரூர் கழகச் செயலாளர் தங்கவேலு கூத்தைப்பார் பேரூர் மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தீவிர வாக்கு சேகாிப்பில்செய்தியாளர்கள் சந்திப்பு – முக்கிய அம்சங்கள்:

பிரச்சாரத்தின் இடையே செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது:

வளர்ச்சித் திட்டங்கள்:

HARINI JEWELLERS TRICHY

“எனது தாய் வீடாகக் கருதும் திருவெறும்பூர் தொகுதியில் கடந்த காலங்களில் ₹450 கோடிக்கும் மேல் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மக்களிடையே திமுகவிற்கு அமோக வரவேற்பு உள்ளது.”

மக்களின் கோரிக்கைகள்:

“பிரச்சாரத்தின் போது மக்கள் உரிமையோடு வழங்கும் கோரிக்கை மனுக்கள் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மீண்டும் ஆட்சி அமைந்ததும் அனைத்துக் கோரிக்கைகளும் முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றப்படும்.”

குப்பை கிடங்கு அகற்றம்:

“அரியமங்கலம் குப்பை கிடங்கை 2027-க்குள் முழுமையாக அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 80% பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகள் அகற்றப்பட்ட பின் அவ்விடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”

தீவிர வாக்கு சேகாிப்பில்சர்வீஸ் சாலை:

“மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை அமைப்பது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெறும் பெயரளவில் இல்லாமல், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சாலை அமைக்கப்படும்.”

நீதிமன்றத் தீர்ப்பு குறித்த கருத்து:

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த சம்பவம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற அமைச்சர், “தவறு நடந்ததை ஒப்புக்கொள்ளாமல் அப்போதைய முதலமைச்சர் காலம் தாழ்த்தியது வருத்தத்திற்குரியது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.