அனிருத் திருமணம் முதல் விஜய் பிரதமர் வரை !
பிரபல டாரோ கார்டு ரீடர் ஜெயஸ்ரீ, அனிருத்தின் திருமணம் மற்றும் தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் குறித்து வெளியிட்ட கணிப்புகள் தற்போது இணையத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்து சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே அனிருத்தின் திருமண வாழ்க்கை குறித்து ஜெயஸ்ரீ தினத்தந்தி டிவி நிகழ்ச்சியில் கணித்திருந்தார். அதில், அனிருத்தின் மனைவி தொலைக்காட்சி / ஊடகத் துறையைச் சேர்ந்தவராகவும், எம்.பி.ஏ. படித்த அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்துப் பெண்ணாகவும் இருப்பார் என்றார்.

மேலும், இருவர் வீடும் 1-2 கி.மீ தொலைவிற்குள் இருக்கும் என்றும்; இது காதல் திருமணமாக அமையும் என்றும் கூறியிருந்தார். தற்போது அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில், சன் நெட்வொர்க் குடும்பத்தைச் சேர்ந்த, போயஸ் கார்டனில் வசிக்கும் காவ்யா மாறனின் பின்னணியோடு இந்த கணிப்புகள் அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருந்திப் போவது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய் அவர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து பேசும்போது, அவர் முதலமைச்சராகத் தனது 5 ஆண்டுகால ஆட்சியை மிகுந்த சிரமங்களுக்கும் சவால்களுக்கும் இடையே முழுமையாக நிறைவு செய்வார். அவர் நினைத்த காரியத்தை முழுமையாக செய்ய முடியாது என்றும்; விஜய்க்குப் பிரதமர் ஆகும் வாய்ப்புகள் குறைவு என்றும்; அவரது முழு கவனமும் தமிழகத்தை நோக்கியே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனிருத்தின் திருமண அழைப்பிதழ் முதல்வர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சூழலில், ஜெயஸ்ரீயின் இந்த இரு வேறு கணிப்புகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
Comments are closed, but trackbacks and pingbacks are open.