அங்குசம் பார்வையில் ‘அந்தரன்’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: ஸ்ரீகிரிஷ் பிக்சர்ஸ் எம்.கே.சாம்பசிவம். டைரக்டர்: சந்தோஷ் ராவணன், ஆர்டிஸ்ட்: பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், செந்தில் குமாரி, எம்.கே. சாம்பசிவம், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், ஒளிப்பதிவு: கிஷோர் ராமச்சந்திரன், இசை: எஸ்.ஆர்.ஹரி, எடிட்டிங்: இக்னேஷியஸ் & சதீஷ் குரோசவா, பி.ஆர்.ஓ.: நிகில் முருகன்

கார்த்திகாவுக்கு [ இவனா வருண்] நிச்சயக்கப்படும் மாப்பிள்ளைகள் மூன்று பேர் கொல்லப்படுகிறார்கள். இதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் போலீஸ் அதிகாரி பத்மநாபன் செழியன்[ பிரஜின்]. ஏற்கனவே தான் காதலிப்பவனை, தனது அப்பா மிரட்டுவதாகவும் அவனைக் காணவில்லை எனவும்  போலீஸில் கார்த்திகா கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருப்பதை ஸ்மெல் பண்ணுகிறார் செழியன். மாப்பிள்ளைகள் மூவரையும் கொன்றது யார்? காணாமல் போன அந்த இளைஞனின் கதி என்ன? இதான் இந்த ‘அந்தரன்’.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

‘Antharan’ க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படமா? இல்ல கொலைகள் பற்றிய ஆவணப்படமான்னு படம் முடிஞ்ச பிறகும் நமக்கு டவுட் க்ளியராகல. ஏன்னா… ”அவனை விசாரிச்சீங்களா? சிசிடிவி ஃபுட்டேஜைப் பார்த்தீங்களா? வாட்ச்மேனை விசாரிச்சீங்களா? காணாமல் போன அந்தப் பையன் எங்கே? அவனோடஃப்ரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சீங்களா?”ன்னு சக போலீஸ் அதிகாரி ஐஸ்வர்யா கண்ணன்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்காரு. “எஸ்…சார்… விசாரிச்சோம் சார்… ஃபுட்டேஜைப் பார்த்தோம் சார்…”னு இவரும் சொல்லிக்கிட்டே இருக்காரு.

இல்லேன்னா.. ஃபாரன்ஸிக் டிபார்ட்மெண்ட்ல இருக்கும்  தன்னோட ஃப்ரண்ட் பிரியங்கா செல்விகிட்ட டவுட் கேட்குறாரு.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஹீரோயின் இவானா அருண் நடிப்பு பக்கா செயற்கைத் தனம். அதிலும் அவருக்குள் இருக்கும் மல்டிபிள் பெர்சானலிட்டியை வெளிப்படுத்தும் சீனெல்லாம் கொடுமையோ கொடுமை. இவரின் அப்பாவாக தயாரிப்பாளர் சாம்பவசிவம், அம்மாவாக செந்தில்குமாரி, ப்ரஜினின் டாக்டர் அத்தையாக அனுபமா குமார், இவர்களெல்லாம் படத்தில் அட்டெண்டென்ஸ் போட்டுள்ளார்.

க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் வச்சீக பாருங்க,  சாரி….வெரி சாரி …சந்தோஷ் ராவணன் ப்ரோ.

அங்குசம் பார்வையில் ‘அந்தரன்’ 30/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.