அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ஹார்ட்டின்’

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

தயாரிப்பு: ‘டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ‘ ரவீந்திரன் & ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ். டைரக்டர்: கிஷோர் குமார். ஆர்டிஸ்ட்: சனந்த், மடோனா செபஸ்டின், டி.இமயா, வாட்ஸ்அப் மணி, பிரகதி, உமா பத்மநாபன், அஜித் கோஷி, வர்கீஸ், ஒளிப்பதிவு : வி.முகேஷ்வரன், இசை: ராஜேஷ் முருகேசன், எடிட்டிங்: பரத் விக்ரமன், காஸ்ட்யூம் டிசைனர்: உத்ரா மேனன், ஆர்ட் டைரக்டர்: ஜி.துரைராஜ், பிஆர்ஓ: நிகில் முருகன்

தனது நண்பன் வாட்ஸ்-அப் மணி இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடத்தும் ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கிறார் சனந்த். அங்கே எதேச்சையாக  அவரைச் சந்திக்கும் இமயா, பின்னர்  தமிழ் சினிமா வழக்கப்படி சனந்தைக் காதலிக்கிறார். ஆனால் சனந்தோ, கல்லூரிக் காலத்தில் மடோனா செபஸ்டினைக் காதலித்து, பிரேக்-அப் ஆன கதையைச் சொல்லி, இமயாவின் காதலை ஏற்க மறுக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி மனம் மாறி, மீண்டும் காதலிக்கிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

ஜெய்ப்பூரிலிருந்து இமயாவை அழைத்துக் கொண்டு சென்னை வந்து தனது பெற்ரோரிடம் [அஜித் கோஷி-பிரகதி] அறிமுகப்படுத்துகிறார். இமயாவின் பெற்றோருக்கும் [ வர்கீஸ்—உமா பத்மநாபன்] சனந்தைப் பிடித்துவிட, இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் நேரத்தில் பைக் ஆக்சிடெண்டில் சிக்கி, பழைய நினைவுகள் மறந்து போகிறது சனந்துக்கு. அதாவது இமயாவுடன் பழகியது மறந்து போய், மடோனா செபஸ்டினுடனான நினைவுகள் மட்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பிரேக்-அப் சொன்ன மடோனா செபஸ்டினை மீண்டும் காதலிக்க  சனந்த் வற்புறுத்துகிறார். இமயாவா? மடோனா செபஸ்டினா? இதான் இந்த ‘ஹார்ட்டின்’.

 சனந்த் சில சீன்களில் நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார். பல சீன்களில் கஷ்டப்பட்டிருக்கிறார். வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து சனந்தும் இமயாவும் பேசிக் கொள்ளும் காட்சி ரசனையாக இருக்கு. முன்னாள் அமைச்சர் அண்ணன்  தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார். ஆஸ்பத்திரியில் சனந்த் அட்மிட்டாகியிருக்கும் சீனில் இமயாவின் நடிப்பு ஓகே. இன்னும் கொஞ்சம் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒரு ரவுண்ட் வரலாம்.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

மடோனா செபஸ்டினின் முகத்தில் முதிர்ச்சி ரேகைகள் தெரிகிறது. அமெரிக்காவுக்குப் போவதற்காக சனந்துடன் பிரேக்-அப் பண்ண அவர் சொல்லும் காரணங்கள் ஏற்கும்படி இல்லை. சனந்தின் நண்பனாக வாட்ஸ்-அப் மணியின் காமெடி பெர்ஃபாமென்ஸ் சில சீன்களில் நன்றாகவே ஒர்க்-அவுட் ஆகியுள்ளது. இவரின் காதல் மனைவியாக வரும் டெப்னிதாவும் ஓகே தான்.

ஜெய்ப்பூரின் மலைப் பிரதேசங்களையும் டவுணையும் பல்வேறு கோணங்களில் தனது கேமராவால் அள்ளி வந்து விஷுவல் ட்ரீட் வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் முகேஷ்வரன். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை இதமாக இருக்கு.

‘ஹார்ட்டின்’ இதயத்திற்குள் இறங்கவில்லை.

அங்குசம் பார்வையில் ‘ஹார்ட்டின்’ 40/100

—   ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.