இரண்டு க்ளைமாக்ஸ்! ‘அரூபி’ சினிமா அதிசயம்!
‘புனர்தம் புரொடக்சன்ஸ்’ பேனரில் பிரதீப் ராஜ் மலையாளத்தில் தயாரித்து தமிழில் ‘அரூபி’யாக ஜூலை மாதம் ரிலீஸ் ஆகிறது. இதனால் தமிழ் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஜூன் 29-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்..
இயக்குநர் அபிலாஷ் வாரியர்
“இந்தப் படம் மலையாளம் மட்டுமல்ல, எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இரண்டு க்ளைமாக்ஸ் இருக்கு. அது ஏன்னு படம் பார்த்த பிறகு உங்களுக்கு புரியும் “.
தயாரிப்பாளர் பிரதீப் ராஜ்
“இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் கதைதான். படம் முடிந்து வெளியே வரும்போது, ‘இவ்வளவு அருமையான கதையை இதுவரை யாரும் ஏன் படமாக எடுக்கவில்லை?’ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்த அளவுக்கு சிறப்பான கதையை அபிலாஷ் மிகுந்த உழைப்புடன் திரையில் கொண்டு வந்துள்ளார். இளம் நடிகர்களையும் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு மக்கள் பேசுவார்கள், விவாதிப்பார்கள், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதற்காகவே நான் காத்திருக்கிறேன்”.
ஹீரோ விஷாக் ரவி
“பிரதீப் ராஜ் சார் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, தந்தை போன்றவர். அவர் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது.
ஹீரோவாக எனது முதல் படம் இது. அதனால் உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் எனக்கு மிகவும் முக்கியம்.”.
நடிகை நேஹா சாவ்லா
“கேரளாவில் நடைபெற்ற புரமோஷன்கள் எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இப்போது சென்னை வந்து தமிழ் ரசிகர்களை சந்திப்பதும் எனக்கு இன்னொரு கனவு நனவானது போன்ற உணர்வை தருகிறது”.
நடிகை சாக்ஷி படாலா
“இந்த வாய்ப்பை எனக்கு வழங்கி, மொழி ஒரு தடையாக இருந்தபோதும் என் மீது முழு நம்பிக்கை வைத்த இயக்குநர் அபிலாஷ் சாருக்கும் தயாரிப்பாளர் பிரதீப் சாருக்கும் மற்றும் படக்குழுவில் உள்ள அனைவரும் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் நன்றி.
உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது”.
நடிகர் சம்பத் ராம்
“மலையாள இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் எனக்கு மிகப்பெரிய கதாபாத்திரங்களை வழங்கினர்.
அதில் ‘மாளிகாபுரம்’ படம் எனக்கு மிகவும் சிறப்பான படமாக அமைந்தது. அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது”.
இசையமைப்பாளர் எஸ். எஸ்.குமரன்
“மலையாள திரைப்படத் துறை இன்று உலகளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக கதைக்களம் சார்ந்த படங்களும், அவற்றின் வணிக வெற்றிகளும் இந்திய சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவது பாராட்டத்தக்க விஷயம்.
அந்த வரிசையில் ‘அரூபி’ படமும் ஒரு முக்கியமான வெற்றிப்படமாக அமையும் “.
நடிகர் அசோக்
“இந்தப் படமும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.
டிரெய்லரைப் பார்த்தபோது, ஒளிப்பதிவு, லைட்டிங், சவுண்ட் டிசைன், பின்னணி இசை உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மிகவும் கவர்ந்தன. திரையில் மிகச் சிறந்த அனுபவத்தை இந்தப் படம் வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கு”.
நடிகர் விண்செ ண்ட் அசோகன்
“தமிழ் மற்றும் மலையாள திரையுலகிற்கிடையே பல ஆண்டுகளாக வலுவான உறவு இருந்து வருகிறது. அதனால் இந்தப் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.”
விநியோகஸ்தர் ராகவா ராம்
“இயக்குநர் இந்தப் படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களது முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்”.
இப்படத்தில் விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால் மற்றும் கிரண் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தொகுப்பு : வி.டி.வினீத் கலை இயக்குநர்: மகேஷ் ஸ்ரீதர், பிஆர்ஓ: கேப்டன் எம்.பி.ஆனந்த்
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.