“நடிக்க வந்து மாட்டிக்கிட்டேன்” – தயாரிப்பாளர் ஷரண்
கோதை எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் எம் .எஸ் . ஸ்விஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தி டார்க் ஹெவன் ‘.
நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்யமான அம்சங்களுடன் க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது.
அறிமுக நாயகன் தொலைக்காட்சி புகழ் சித்து, தர்ஷிகா , ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, சாப்ளின் பாலு மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி, பிஆர்ஓ: சக்தி சரவணன்
ஜூலை 17–ல் தமிழ், ஆங்கிலம் , தெலுங்கு , ஹிந்திமொழிகளில் வெளியாவதையொட்டி
படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் ஜூன்.27 காலை நடந்தது.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…..
முதலில் தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், மனோஜ் ஆகிய மூவரும் பேசினார்கள்.
மனோஜ்,
“இப்போது வரும் சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் ஓடுவதில்லை. சில படங்கள் ஓடிடியில் ஓடுகின்றன. எல்லா நல்ல படங்களும் ஓடுவதில்லை. இது ஆபத்தானது. .நல்ல படங்களை வரவேற்பதற்கு ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் கொண்டு போய் சேர்க்க வேண்டும் . நிறைய உப்புமா படங்கள் வருகின்றன. இன்று பல தயாரிப்பாளர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
உப்புமா படங்களால், தரமற்ற படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் பாதிப்பு அல்ல, பலருக்கும் பாதிப்பு. திறமையான இயக்குநர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைக்காமல் இருக்கிறது. திரை உலகிற்குத் தயாரிப்பாளர் மிக முக்கியம். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய க்ரைம் த்ரில்லராக இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது”

ஷரண்
” நான் இந்தப் படத்தில் நடிப்பதற்காகத் தான் வந்தேன் . ஆனால் பாலாஜி இந்தப் படத்திற்காக உழைப்பதையும் போராடுவதையும் நேரில் பார்த்ததும் அவரது சிரமத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகவே தயாரிப்பில் இணைந்து கொண்டேன். இஷ்டப்பட்டு மாட்டிக்கிட்டேன்”.
கோபால்
“இந்தப் படம் தமிழ் சினிமாவில் சிறப்பான படம். பாலாஜி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநர். அவர் இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு எடுத்த படம் இது. சினிமாவில் அவருக்கான நல்ல இடம் கிடைக்கும். இந்தப் படத்தில் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் யாரும் சோடை போகமாட்டார்கள் .இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் “.
நடிகர் ஜெயக்குமார்
“நடந்து போகக் கூட முடியாத இடத்துக்கெல்லாம் எங்களை அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினார்டைரக்டர். அதுதான் அவரின் தனித்தன்மையாக இருந்தது”.
நடிகர் ,எழுத்தாளர் வேல ராமமூர்த்தி
“இயக்குநர் பாலாஜி வழக்கமாக கதை சொல்லும் போது இயக்குநர்கள் சொல்வது போல்தான் இருந்தது. போனில் மிகவும் நம்பிக்கையுடன் தான் பேசினார். நான் சற்று சந்தேகப்பட்டேன். இந்தப் படம் எடுக்க முடியாமல் தோற்று விட்டால் நான் அமெரிக்கா சென்று விடுவேன் என்றார் பாலாஜி . அவரது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைத்து நான் நடிக்கச் சம்மதித்தேன்.
பாலாஜியின் உழைப்புக்காகவே இந்தப் படம் ஓட வேண்டும். பெரிய பெரிய படங்களுக்குக் கூட இவ்வளவு லொகேஷன்களில் எடுத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தேடித் தேடி எடுத்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ட்ரெய்லர் பார்க்கிற வரை எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இல்லை .இப்போது சொல்கிறேன் .இந்தப் படம் தோற்காது. அவர் அமெரிக்கா செல்ல வேண்டியிருக்காது”.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி
” உடன்பால் , ஜாக்கி படங்களுக்குப் பிறகு இசையமைக்கும் மூன்றாவது படம். என்னைச் சந்திக்க இயக்குநர் பாலாஜி வரும்போது எப்போதும் பத்து பேருடன் தான் வருவார். அந்த அளவிற்கு அந்த படக் குழு ஒற்றுமையோடு இணைந்திருந்தார்கள்”.
ரித்விகா
“ஏகப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்படம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 70% படத்தை எடுத்துவிட்டு வேண்டாம் என்று தூக்கிப்போட்டுவிட்டு மீண்டும் அதே படத்தை அதே லொகேஷன்களில் எடுத்து ரிலீஸ் வரை கொண்டு வந்திருப்பதே சாதனைதான். படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தினசரி ஏதாவது பிரச்சினை வரும். இதை சமாளித்து இயக்குநர் பாலாஜி ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருந்தார். கதைகளை மட்டுமே நம்பி இன்று ஹபீபி ,நூறு சாமி போன்ற படங்கள் ஓடுகின்றன. அந்த வகையில் இந்தப் படமும் ஓடும்”

இயக்குநர் பாலாஜி “தயாரிப்பாளர் ஷரண் இஷ்டப்பட்டு வந்தார் .அவர் இல்லாவிட்டால் இந்தப் படம் இந்த அளவிற்கு வந்திருக்காது. அதேபோல் கோபால் அவர்கள், என் தம்பி மனோஜ் ஆகியோர் பெரிதும் பக்கபலமாக நின்றார்கள்.இந்தப் படத்தின் மீதும் என் மீதும் சிலருக்குச் சந்தேகம் இருந்தது .சந்தேகப்பட்டார்கள் .ஆனாலும் நான் இந்தப் படத்தை முடித்து விட்டேன்.மிகவும் நம்பிக்கையோடு இருக்கிறேன்”.
ஹீரோ சித்து
“இன்றைய காலகட்டத்தில் நாமே நம்மைப் பற்றி சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் நம்மை நாமே முன் வைக்க வேண்டும் . அப்படிப்பட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். ‘திருமணம்’ தொடரில் நடித்ததற்குப் பிறகு வந்துள்ள ஒரு பெரிய வாய்ப்பாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்தவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கற்றுக் கொண்டேன்”.
— ஆண்டவர்







Comments are closed, but trackbacks and pingbacks are open.