கலைஞரும் வழங்கிய புரட்சி நடிகர் பட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலைஞரும் புரட்சி நடிகரும்…

5.4.1952 அன்று உறந்தை உலகப்பன் அவர்களின் அரும்பு நாடகம் நடைபெறுகிறது. தலைமையேற்று கலைஞரும், முன்னிலை எம்.ஜி.ஆரும்.
உறந்தை உலகப்பன் கருணாநிதியிடம் சென்று அவர் காதுக்கருகில் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தை தாங்கள் வழங்க வேண்டும் என்று அறிவித்தார்.

Srirangam MLA palaniyandi birthday

சிறிது நேரம் யோசித்த கலைஞரும் பின்பு, அன்பு மூன்றெழுத்து, பாசம் மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, வீரம் மூன்றெழுத்து, களம் மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து, அந்த வெற்றியை நோக்கி நம்மையெல்லாம் அழைத்து செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து, அதே போல் மூன்றெழுத்துக்கு சொந்தக்காரரான எம்.ஜி.ஆருக்கு இந்த மேடையில் புரட்சி நடிகர் என்ற பட்டத்தை வழங்குகிறேன் என்ற வரலாற்று பதிவாக இதை வழங்கினார். பட்டத்தை பெற்ற எம்.ஜி.ஆர். மிக்க நன்றி என்றார் கலைஞருக்கு.

இனிமேல் புரட்சி நடிகராகவே என்னை கழகத்திற்கு அர்ப்பணித்துக் கொள்கிறேன். கதர் ஆடை அணிந்திருந்தாலும், பெரியார், அண்ணா கொள்கைகளுக்காக பாடுபடுவேன். கலைஞரும் நானும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டோம். இயக்க கொள்கையிலே எனக்கு ஈடுபாடு வருகிறது. என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை அண்ணாவிற்கும், தி.மு.க.விற்குமாக கடைசி வரை உழைப்பேன், பாடுபடுவேன் என உறுதியளித்து பேசுகிறார் புரட்சி நடிகர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

கற்புக்கரசியை காக்க வந்த கடவுள், துஷ்ட, நிக்ரக, இஷ்ட பரிபாலம் செய்ய வந்த ஆண்டவன் எடுத்த அவதாரம் என்றெல்லாம் எல்லாம் எண்ணாதீர். நான் தான் மலைக்கள்ளன். இந்த வசனம் எம்.ஜி.ஆரின் மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் தீட்டியது. வசனமும் வெற்றி. படமும் அபார வெற்றி. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டனர். எம்.ஜி.ஆரின் தன்னம்பிக்கை சிறகுகள் முளைத்திருந்தன. மலைக்கள்ளன் வெற்றி எம்.ஜி.ஆரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தங்கள் வீட்டுச் சுவர்களில் எல்லாம் மலைக்கள்ளன் உருவத்தை வரைந்து கொண்டாடினர். தி.மு.க. உறுப்பினராக இருந்ததால் தி.மு.க. மாநாட்டு மேடையில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அட்வகேட் அமரனை பார்க்க முடிந்தது. 1954 சித்தூரில் தி.மு.க. மாவட்ட மாநாடு, செங்கற்பட்டு மாவட்ட மாநாடு என்று தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர் மிகமிக வேகமாக நுழைந்து கொண்டிருந்த மறக்க முடியாத நேரம்.

எம்.ஜி.ஆரையும், சிவாஜியையும் இணைத்து கூண்டுக்கிளி படம் எடுத்த டி.ஆர்.ராமண்ணா சந்தித்த நஷ்டத்தை ஈடுகட்டவும், விட்ட பணத்தை பிடிக்கவும், எம்.ஜி.ஆரை வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்க வேண்டும் என்ற அவசரமும், அவசியமும் டி.ஆர்.ராமண்ணாவுக்கு அப்போது உதித்தது. அதன்படி அவர் எடுத்த திரைப்படம் குளேபகாவலியில் புலியுடன் மோதிய எம்.ஜி.ஆரை திரையில் பார்த்த ரசிகர்களின் கைத்தட்டல் அரங்கை அதிரச் செய்தது. குளேபகாவலியின் வெற்றி, எம்.ஜி.ஆருக்கும், டி.ஆர்.ராமண்ணாவுக்கும் மறக்க முடியாத வெற்றியானது.

அடுத்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும், வண்ணப்படம் கூடுதல் கவனஈர்ப்பு, கூடுதல் வெற்றி இப்படமும் அபார வெற்றி. அந்த வெற்றியின் தாக்கத்தில் இருந்தபோது தயாரானதுதான் மதுரைவீரன். வசனம் கவியரசு கண்ணதாசன். இதுவும் வெற்றிமேல் வெற்றி. வெற்றிகொடுத்த தன்னம்பிக்கையா? அல்லது கட்சி கொடுத்த நிபந்தனையா தெரியாது.

ஆனால் தான் ஒரு நாயகன். தன்னுடைய ஆளுமையை திரைப்படத்தில் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து தான் நடித்த ஒவ்வொரு திரைப்படத்திலும் அதை நிறைவேற்றினார். நிரூபித்தார் என்பதே புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் வரலாறானது.

-ஹரிகிருஷ்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.