அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முத்துவேலாக அருள்நிதி! ‘அருள்வான்’ நியூஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

’90 பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ்’ பேனரில் எஸ்.ஜி.சரவணன் தயாரித்து வரும் 17-ஆம் தேதி ரிலீசாகும் படம் ‘அருள்வான்’. ‘வீரசிவாஜி’, ‘தேன்’, ‘தகராறு’ ஆகிய படங்களை டைரக்ட் பண்ணிய கணேஷ் விநாயகன் டைரக்ட் பண்ணியுள்ள இப்படத்தில் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், பேபி கிருத்திகா, காளிவெங்கட், விடிவி கணேஷ், ‘சித்தப்பு’ சரவணன் உட்பட பலர் நடித்துள்ளனர். இணைத் தயாரிப்பு : சுபா சரவணன், சரண், சரத்,  ஒளிப்பதிவு : எம்.சுகுமார், இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : லாரன்ஸ் கிஷோர், பி.ஆர்.ஓ: நிகில் முருகன்.

17-ஆம் தேதி ‘அருள்வான்’ ரிலீசாவதால், படத்தின் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூலை.06-ஆம் தேதி காலை நடந்தது. விழாவில் பேசியவர்கள்…

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

காளிவெங்கட், “மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள் கூட நடமாடாத வனப்பகுதியிலும் மலைப்பகுதியிலும் ஷூட்டிங் நடந்தது த்ரில்லிங் அனுபவமாக இருந்தது. இதைவிட த்ரில்லிங் என்னன்னா கேமராமேன் சுகுமார் ரிவர்ஸில் வேகமாக ஓடி ஷூட் பண்ணுவார். நாங்க அவரை நோக்கி முன்பக்கமாக ஓடுவோம்”

பேபி கிருத்திகா & ரம்யா பாண்டியன்
பேபி கிருத்திகா & ரம்யா பாண்டியன்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

ரம்யா பாண்டியன், “கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாக இருப்பது சகஜம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் அந்த மலைவாழ் மக்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் டைரக்டர் கணேஷ் விநாயகனின் நல்ல முயற்சிக்கு நானும் உறுதுணையாக இருந்ததில் பெருமைப்படுகிறேன்”.

சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன், “கருத்தியல் ரீதியாகவும் காட்சிகள் ரீதியாகவும் இந்தப் படம் சொல்லும் சங்கதிக்காகவே இந்தப் படத்தை தமிழ்நாடெங்கும் ரிலீஸ் பண்ணுகிறேன்”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

பேபி கிருத்திகா, “எனது முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நட்சத்திரங்களுடன் நடித்ததில் மகிழ்ச்சி. இதற்காக டைரக்டர் கணேஷ் விநாயகன் சாருக்கு நன்றி”.

அருள்நிதி
அருள்நிதி

இயக்குனர் கணேஷ் விநாயகன், “கதையின் நாயகனாக காளிவெங்கட்டை வைத்து சின்னதாகத் தான் தொடங்கியது இப்படம். ஆனால் தயாரிப்பாளர் சரவணன் சார் தான், கதையின் முக்கியத்துவம் அறிந்து பெரிய நடிகர்கள், டெக்ச்னீஷியன்களை கமிட் பண்ணச் சொல்லி பெரிய படமாக்கினார். அருள்நிதி  மற்றும் ஆரவ் கொடுத்த ஒத்துழைப்பும் உழைப்பும் இந்தப் படத்தை மேலும் பெரிதாக்கியது. அருள்நிதி, ஆரவ், பேபி கிருத்திகா இந்த  மூன்று பேரும் தான் படத்தின் ஹீரோக்கள். பேபி கிருத்திகாவுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்”.

ஆரவ், “இது போன்ற கேரக்டர் எனது சினிமா கேரியரில் இனிமேல் அமையுமா என்பது தெரியவில்லை. கல்வி தான் நமது சொத்து என்பதைப் பேசுகிறது இப்படம்”.

அருள்நிதி, “கதையைச் சொல்லி முடித்ததும் அஞ்சு நாள் கால்ஷீட் போதும்னு டைரக்டர் சொன்னார். அப்புறம் பத்து நாளாகி, இருபது நாள்ல முடிஞ்சது. அதற்குக் காரணம் கதை தான். மாவட்ட ஆட்சியர் முத்துவேல் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். குழந்தைகளின் கல்வி குறித்து பேசியிருக்கும் படம். மீடியாக்களும் மக்களும் பேராதரவு தரவேண்டும்”.

—   ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.