கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் – அமைச்சா் உறுதி !

தமிழ்நாடு மாநில சோழிய வெள்ளாளர் சங்கத்தின் சார்பில், திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துத் தங்களது முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

முக்கிய நிகழ்வுகள்:

மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எல்லக்குடி வட்டாரக் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சரிடம் சங்கத்தின் சார்பில் சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

சோழிய வெள்ளாளர் சங்கம் ஆதரவுஅமைச்சரின் உறுதிமொழி:

கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்” என உறுதி அளித்தார்.

பங்கேற்ற நிர்வாகிகள்:

இந்நிகழ்வில் சோழிய வெள்ளாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளான கோவிந்தராஜ், பேராசிரியர் மாணிக்கம், தங்க ரத்தினகுமார் திருநாவுக்கரசு மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.