டாஸ்மாக்கை எதிர்க்கும் பெண்களைத் திருப்திப்படுத்த தான் மகளிர் உரிமைத்தொகையா?
ஒரு நாளிதழ் விளம்பரத்தில் புரோட்டா மாஸ்டர் தேவை என்ற விளம்பரத்தில் மாதம் 30ஆயிரம் என்றிருந்தது. அறிவூட்டும் கல்லூரி ஆசிரியர் பணிக்கு 15 ஆயிரம் என்றிருந்தது. இது எதைக் காட்டுகின்றது?
அறிவூட்டும் கல்விப் பணிக்குப் படித்து முடித்த ஆசிரியர்கள் அதிகம் இருக்கிறார்கள். படிக்காத நிலையில் புரோட்டா மாஸ்டர்கள் எண்ணிக்கையில் குறைவாக உள்ளனர் என்பதால்தான் புரோட்டா மாஸ்டர்கள் காட்டில் மழை பொழிகின்றது.
தமிழகத்தின் எல்லா மதக் கோயில்களையும் ஒரே குடையின் கீழ்ச் சேர்த்து அரசின் அறநிலையத்துறையின் கீழ் நிர்வாகம் செய்வது சாத்தியமா?
இந்து மதம் சார்ந்தவர்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர். கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் மதச் சிறுபான்மையினர் என வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது. இந்தச் சூழலில் அறநிலையத் துறையின் கீழ் நிர்வாகம் செய்வது சாத்தியமில்லை.
இப்படியும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்குச் சான்று இருப்பின் தரமுடியுமா?
ஏமன் நாட்டின் காசுக்கு “ரியால்“ என்று பெயர். அந்தக் காசு வெள்ளியில் இருந்தது. காசின் மதிப்பைவிட வெள்ளியின் மதிப்பு அதிகம். இதைக் கவனித்த இந்தியாவின் தொழில் அதிபர் திருபாய் அம்பானி ரியால் காசுகளை வாங்கிக் குவித்து, உருக்கி, அதிலிருந்த வெள்ளியைப் பலகோடிகளுக்கு விற்றிருக்கிறார். முடிந்தால் நீங்களும் யோசித்துப் பாருங்கள்.டாஸ்மாக்கை எதிர்க்கும் பெண்களைத் திருப்திப்படுத்தவே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதாகச் செய்தி உள்ளதே…
எல்லாச் செய்திகளுக்கும் பன்முகப்பார்வை உண்டு. பெண்களை அதிகாரப்படுத்துதல் என்பதற்கு உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தவர் பொருளாதார அறிஞர் தற்போதைய திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.பெரும் பணம் ஈட்டும் டாக்டர்கள், வக்கீல், இன்ஜினியர்கள் துறையில் மக்கள் சேவையில் பெயர் பெற்றவர்கள் இன்றும் உள்ளனரா?
மக்களை நேசிக்கும் மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர்கள் இன்றும் என்றும் இருப்பார்கள். விழுக்காட்டில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம்.கடவுள் மறுப்பை வைத்து அரசியல் செய்யும் அமைச்சர்களே தற்போது வெளிப்படையாக ஆலயங்களுக்குச் செல்வது தங்களது கருத்து.
கடவுள் மறுப்பை வைத்து அரசியல் செய்வது பெரியார் தலைமையில் இயங்கிய திராவிடர் கழகம் தற்போது வீரமணி தலைமையில் செயல்பட்டு வருகின்றது. திராவிடர் கழகத்தில் யாரும் அமைச்சர்களாக இல்லையே.தமிழ்நாடு அரசு படிக்கும், வேலைக்குப் போகும் பெண்களுக்காகச் சென்னை குரோம்பேட்டையில் அமைத்துள்ள தோழி இல்லத்தின் மாதக் கட்டணம் ரூ.300 என்பது வியப்பாக இல்லை?
ஒரு நாளைக்கு 300 என்பதே சென்னையின் அறை வாடகை என்பது மிகவும் குறைவு. இந்த நிலையில் மாதம் ரூ.300 என்பது நினைத்துப் பார்க்கமுடியாத குறைவுதான். பெண்களை அதிகாரப்படுத்துதல் என்ற நிலையை நோக்கி மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்பதையே புரிந்துகொள்ளமுடிகின்றது.அமைச்சர் உதயநிதி “எனக்கு எப்போதும் கடவுள் நம்பிக்கை இல்லை’ என்று கூறியிருப்பது உண்மையா?
கடவுள் என்ற ஒருவர் இல்லை என்பதால், எனக்குக் கடவுள்மீது நம்பிக்கை எப்போதும் இருந்தது இல்லை என்று விளக்கமாகவும் தெளிவாகவும் கூறியிருப்பது உண்மைதான்.நாம் தமிழர் கட்சி திருமதி காளியம்மாள் கட்சிப் பொதுக்குழுவில் பேசும்போது,“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ஆம் வென்று, அடுத்த பொங்கலுக்கு 40 தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொங்கல் வைக்கவேண்டும்” என்றது நம்பிக்கையா? ஆசையா?
நாம் தமிழர் கட்சியின் அடுத்த பெண் பொதுச்செயலாளர் அம்மா காளியம்மாள்தான் என்று சமூக ஊடகங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் இதையும் பேசாமல் இருப்பது முறையாக இருக்குமா? நம்பிக்கையோ… ஆசையோ இருந்துவிட்டுப் போகட்டும்.வால்மீகி இராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றதா? புரியும்படி சில எடுத்துக்காட்டுகள் கூறமுடியுமா?
வால்மீகி இராமாயணம் இராமன் வனவாசம் முடிந்து நாட்டிற்குத் திரும்பி முடிசூட்டிக்கொண்டு அரசனாகிப் பின்னர் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு, பின்னர் சரயு நதியில் தற்கொலை செய்து கொள்ளவதாக வால்மீகி இராமாயணம் முடியும். கம்பராமாயணத்தில் இராமன் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்பி முடிசூட்டிக் கொள்வதோடு முடியும். கம்பன் இராமன் தற்போதைய இலங்கை சென்று சீதையை மீட்டு வந்தாகக் கூறப்பட்டிருக்கும்.
லஞ்சம் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்தவர்கள்தான், தற்போது லஞ்சம் வாங்குவதாக என் நண்பன் சொல்கிறான்… இது உண்மையா?
லஞ்சம் கொடுக்காமல் அரசு வேலையில் சேர்ந்த வருவாய் அலுவலர்கள் 80களில் சாதி சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற மாணவர்களுக்குத் தேவைப்படும் சான்றுகளுக்கு ரூ.10/- அளவில் லஞ்சம் பெற்றனர்.