உ.பி. கண்டக்டர்களுக்கான காண்ட்ராக்டை ரத்து செய் !
உத்திரபிரதேச மாநில நிறுவனமான எஸ். எஸ். என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 1797 நடத்துனர்களை நியமனம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டதை தடை செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் ஆக-27 அன்று அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
தலைவர் டி.வி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்மேள துணை தலைவர் எம்.சுப்ரமணியன், மண்டல பொதுச்செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் கார்த்திக்கேயன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். சர்ச்சைக்குரிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

வாரிசுதாரர்களுக்கு கல்வி தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்திட வேண்டும்; போக்குவரத்து கழகங்களுக்கு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்; தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும்; ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 2026 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட பணங்களை உடனே வழங்க வேண்டும்; காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேண்டும்; பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்; மின்சார பேருந்துகளை கழகங்களின் வாயிலாகவே இயக்க வேண்டும்; மகளிர் பயணத்திற்கு ஈடு கட்டும் தொகைக்கு ஓட்டுனர் மற்றும் நடனர்களுக்கு வசூல் படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
— நிகழன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.