கடைவீதியில் பொடி நடையாய் … பொதுமக்களிடம் குறைகளை கேட்ட டி.எஸ்.பி. !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம், லால்குடியில் சமீப நாட்களாகவே காவல் நிலையத்திற்கு இரவும் பகலுமாக புகார்கள் வந்து குவியும் வண்ணம் உள்ளது. இது நாள்தோறும் நடக்கும் பிரச்சனைகள் தான் புகார்கள் வந்து தருபவர்களை விசாரித்து சமாதானப் படுத்தியோ அல்லது தண்டனை வழங்குவதால் குற்றங்களை தடுக்க முடியாது. அதேபோல் தவறு செய்யும் மனிதர்களிடத்தில் குற்றம் நடைபெறும் இடத்திற்கு சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு எந்த வகையில் உதவிகள் செய்ய வேண்டும். என்பதையும் அவர்களிடத்தில் உள்ள குறைகளை கேட்டு அறிய வேண்டும்.

அதை திருத்துவதற்கான விழிப்புணர்வும் வழங்கவேண்டும் அதற்காக மக்கள் சந்திப்பு நிகழ்வை கையில் எடுத்த லால்குடி டி.எஸ்.பி ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அவர்கள் மற்றும் போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் உதவியாளர்கள் மற்றும் போலீசார் லால்குடி ரவுண்டானா மற்றும் பழைய பேருந்து நிலையம் கடைவீதிகளுக்கு பல  நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதேபோல் பொதுமக்களிடத்தில் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் உள்ள பயத்தை போக்கி குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் போலீசாருக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் எடுத்துரைத்தார். இது போன்ற செயல்கள் மக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த புதிய முயற்ச்சிக்கும் பொதுமக்களின் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்த அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர். இந்த செயல்பாடுகள் மாதம் இரண்டு முறையாவது  தொடர்ந்து நடக்க வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்தனர்.

—  சதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.