திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி மற்றும் ஆத்மா மனநல மருத்துவமனை இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்வு
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித்துறையின் முதுகலை துறையும், திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் மணச்சநல்லூர் சுகாதாரத்துறை இணைந்து நடத்திய மணச்சநல்லூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுநடைபெற்றது.
நித்தம் தூய்மை பணியாளர்கள் மனதளவில் சந்திக்கும் அதில் எப்படி கையாள்வது என்பதை குறித்த திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை பணித்துறையின் உதவி பேராசிரியர் திருமதி பியூலா அவர்களின் வழிநடத்துதலில், முதுகலைத் துறையின் இரண்டாம் ஆண்டு மாணவி ஆரோ பிரவீனா அவர்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி தொகுப்பில் ஆத்மா நல மருத்துவமனையின் மனநல ஆலோசகர் முகமது பாசில் விழிப்புணர்வு வழங்க, மணச்சநல்லூர் பேரூராட்சியின் சுகாதார ஆய்வாளர் தேன்மொழி அவர்கள் தலைமை தாங்க சுகாதார ஆய்வாளர் சந்தோஷ் அவர்கள் சிறப்புரையாற்ற, மண்ணின் வணக்கங்கள் கலைக்குழுவின் தூய்மை பணியாளர்கள் குறித்த மதிப்பு கலந்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சில் அரங்கேற பட்டன.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் 80 க்கும் மேற்பட்ட மணச்சநல்லூர் பேரூராட்சியின் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தங்கள் கவலைகளை எல்லாம் மறந்து மன அழுத்தம் குறைந்து சந்தோசமாக புன்னகை பூத்த தூய்மை பணியாளர்களின் முகத்தில் தெரிந்தது. நிகழ்வின் முத்தாய்ப்பாக பிஷப் ஹீபர்கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறையின் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பு வாழ்த்து காலாண்டர் ஒன்று வெளியிடப்பட்டது.
அதில் தூய்மை என்பது இறைவனுக்கு அடுத்த இடமானால் தூய்மை பணியாளர்கள் என்பவர் இறைவனின் தூதர்கள் அல்லவா என்ற வாசகம் உண்மையிலேயே அங்க கூடியிருந்த தூய்மை பணியாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது….. நிகழ்ச்சியின் ஏற்பாடு செய்த திருச்சி பிஷப்ஹிப்பட் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதுகலை துறையை அங்குசம் நாளிதழ் மனதார வாழ்த்துகிறது.