அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சிலம்பம் சுற்றி தேர்தல் விழிப்புணர்வு ! மக்கள் சக்தி இயக்கத்தின் புதிய முன்னெடுப்பு!

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் சிலம்பம் சுற்றி அனைவரும் வாக்களிக்களியுங்கள்.   பணம், பொருள் வாங்கிக் கொண்டு வாக்களிக்கக் கூடாது என்பதை விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது. “எனது வாக்கு, எனது உரிமை”  “எனது வாக்கு விற்பனைக்கு இல்லை” போன்ற வாசகம் மற்றும் “வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்”,  “பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம்”. என்கிற வாசகம் உள்ள பாதகை ஏந்தி மாணவர்கள் சிலம்பம் சுற்றி 100% வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்  மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி.நீலமேகம் தலைமையில் நடந்தது.

சாமி கலைக்கூடம் சிலம்பம் வைத்தியார் டி.ஜீவானந்தம் அவர்கள் சிலம்பம் பயிற்சி வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் “யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் பணமோ, பொருளோ வாங்கிக் கொண்டு வாக்களிக்காதீர்கள், அது, ஊழலுக்கு துணைபோகும் செயல் என்பதுடன், ஊழல் பணத்தில் பங்கு பெறும் குற்றத்துக்கு உடந்தையாக இருப்பதற்கு சமமான செயல் ” என எடுத்துரைத்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விழிப்பணர்வு பிரச்சாரம்
விழிப்பணர்வு பிரச்சாரம்

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடந்து மக்கள் அதிகம் கூடும் பொது இடமான விளையாட்டு மைதானம், படிப்பக மன்றம், சந்தை, வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபயிற்சி செல்லும் மக்களிடமும் பிரச்சாரம் செய்ய உள்ளோம்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் ஆர். இளங்கோ, வெ.இரா.சந்திரசேகர், தெப்பகுளம் தாமோதரன், ராமசந்திரன், மோகன், ஆர்.நெடுஞ்செழியன், குமரன், சந்துரு மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.