அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வழக்குரைஞரிடமே கைவரிசையை காட்டிய பஜாஜ் பைனான்ஸ் ! நுகர்வோர் ஆணையம் வைத்த ஆப்பு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சட்டம் பயின்று நீதிமன்றத்தில் அன்றாடம் வழக்காடி வரும் வழக்குரைஞர் ஒருவரிடமே, கைவரிசையைக் காட்டி நுகர்வோர் ஆணையத்தில் செம்மையாக குட்டும் வாங்கி, ரூ60,000/-த்தை தண்டத்தொகையாகவும் கட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது, பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) நிறுவனம்.

தஞ்சையை சேர்ந்த வழக்குரைஞர் சு. செல்வநாயகம் M.Sc., LL.B., கடந்த 2024 ஆம் வருடம் டிசம்பர் -07 ஆம் தேதி, கையில் ரொக்கப் பணத்தோடு ரூ17,000 மதிப்பிலான செல்போன் ஒன்றை வாங்க சென்றிருக்கிறார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அப்போது, செல்போன் ஷோரூம் ஊழியர்கள் 0% வட்டியில் மாதத்தவணை முறையில் எடுத்தால், சிபில் ஸ்கோர் உயரும் எங்களுக்கும் டார்கெட் இருக்கிறது என்பதாக பரிவோடு பேசியிருக்கிறார். இவரும், 0% வட்டிதானே வங்கிக்கணக்கில் எப்போதும் போதுமான இருப்பு இருக்கப்போகிறது, என்ற நம்பிக்கையில் அதற்கு சம்மதமும் தெரிவித்திருக்கிறார்.

சு. செல்வநாயகம்
சு. செல்வநாயகம்

யாவரும் கேளீர்

மாதம் ரூ.1,888 வீதம், 02.01.2025 முதல் 02.07.2025 வரை ஏழு தவணைகள். ஒவ்வொரு மாதமும் சரியாக 2- ஆம் நாள் ECS முறையில் EMI பணத்தை எடுத்துக் கொள்ளும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடைசி EMI தொகையான ஜூலை 2-ஆம் தேதி மட்டும் பணத்தை எடுக்கவில்லை. மாறாக, 11.07.2025 அன்று வாடிக்கையாளரும் வழக்குரைஞருமான சு. செல்வநாயகத்தை தொலைபேசியில் அழைத்து, காசோலை பணமின்றி திருப்பப்பட்டதாக கூறி வழக்கமான மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார்கள்.

தனது வங்கி கணக்கு அறிக்கையை (Bank Statement) அனுப்பி, தன் தரப்பில் தவறு இல்லை என்று சொன்னதையெல்லாம் ஏற்க மறுத்து, தாமதக் கட்டணம் மற்றும் காசோலைத் திருப்பப்பட்டதற்கான  கட்டணம் என ரூ.2,418 கட்ட வேண்டும் என்று தொடர்ந்து பலமுறை போன், மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்திருக்கிறார்கள்.

வேறுவழியின்றி, 12.07.2025 அன்று அவர்கள் சொன்னபடியே  ரூ 2418/- யை ஆன்லைனில் பணம் கட்டிய மறுநாளும், ஞாயிறு அன்றும்  மீண்டும் பணம் கட்டச் சொல்லி அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். “எங்களுக்கு இன்னும் Update ஆகவில்லை” என்று அலட்சியமாக பதில் சொல்லியிருக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

”வக்கீலா இருக்க, என்கிட்டயே இந்த வேலையை காட்டுறீங்களே? சட்டமறியாத பொது மக்களிடம் என்னவெல்லாம் செய்வீர்கள்?” என்று, பதிலுக்கு வழக்குரைஞர் சு. செல்வநாயகம் எகிறியிருக்கிறார். சுதாரித்துக்கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர், “எங்க மேனேஜரிடம் சொல்லி, செக் பவுன்ஸ் பணத்தை திரும்ப கொடுக்கிறோம் சார்” என்று பதறியிருக்கிறார்கள்.

அவர் விடுவதாயில்லை. நேராக தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (CC NO:165/2025) வழக்கு தாக்கல் செய்து, நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் சேகர் மற்றும் உறுப்பினர் வேலுமணி ஆகியோர் முன்னிலையில் வாதிடவும் செய்திருக்கிறார்.

நிறைவாக, ”1. சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.530/- தொகையை, வசூலித்த தேதியிலிருந்து திரும்பச் செலுத்தும் நாள் வரை 12% வட்டியுடன். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.

2) சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் புகார்தாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000/- வழங்க வேண்டும். வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும்.” என்பதாக கடந்த 2026 ஜூலை-21 அன்று தீர்ப்பளித்திருக்கிறது, நுகர்வோர் ஆணையம்.

சட்டப் போராட்டத்தின் வெற்றி குறித்து குறிப்பிடும் வழக்குரைஞர் சு.செல்வநாயகம், “இதன் மூலம் பொது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான். பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை  என்ன ரூ.530  தானே என்று கடந்து செல்லாதீர்கள். ஏதும் சண்டையிடாமல் பணத்தை செலுத்தி விட்டு அதன் அடிப்படையில் வழக்கு தொடருங்கள். வெற்றி பெறுவதுடன் அந்நிறுவனங்களுக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்துங்கள்.

நான் நுகர்வோர் ஆணையத்திடம் இறுதியாக வைத்த வாதம் இதுதான், “இந்த நிறுவனம் குறைந்தது இந்தியா முழுவதும் 5,00,00,000/- (5 கோடி) பேருக்கு கடன் கொடுத்ததாக வைத்துக் கொண்டால் கூட இதுபோன்று சட்டவிரோத வசூல் மூலம் அவர்கள் இப்படியாக  பெறும் உத்தேச வருமானம்  ரூ. 530× 5,00,00,000 = 26,50,00,00,000/- இலாபம். (2650 கோடி)”  ஏன் இந்த நிறுவனங்கள் கொழுத்து திரிகின்றன என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன். ” என்கிறார், அழுத்தமாக.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.